வியாழன், 12 ஏப்ரல், 2012

வேர்களை மறவா விழுதுகள்- காரஞ்சன்(சேஷ்)

நண்பர்களே!

 கூட்டுக் குடும்பங்கள் இருந்த நிலை மாறி
முதியோர் இல்லங்களை நாடி
முதுமைப் பருவத்தில் வாடும் பலர்
செல்லும் நிலை உள்ளது.

குடும்பப் பைகளின்
உறவு நூல் அறுந்து
உதிர்ந்த நன்மணிகளாய்ச் சிலர்.


தோட்டத்துச் செடிகளாய் இருந்தவர்கள்
தொட்டிச் செடிகளாய்!

இந் நிலையில் வேர்களை மறவா விழுதுகளாய் நாம் இருக்க வேண்டுகோளாய் இப்பாடல்!

(இளமை கொலுவிருக்கும்  ... பாடல் மெட்டில்)..

உடலில் வலுவிருக்கும் உளத்தில் தெளிவிருக்கும்
எதற்கும் துணிவிருக்கும் இதயத்திலே- இவை
இல்லாமல் பயனில்லை பருவத்திலே!

உடலில் வலுவிருக்கும், உளத்தில் தெளிவிருக்கும்,
எதற்கும் துணிவிருக்கும் இதயத்திலே- இவை
இல்லாமல் பயனில்லை பருவத்திலே

உயிரைச் சுமந்தவளும் தாயல்லவோ?
ஊட்டி வளர்த்தவளும் அவளல்லவோ?
பெற்று வளர்ப்பவர்கள் கண்ணல்லவோ?
பேணிக்காப்பது நம் கடனல்லவோ?
பொறுப்பைச் சுமந்து நமை போற்றி தினம் வளர்த்து
ஏற்றம் அளித்தவர்கள் இவரல்லவோ?-பெற்றோர்
போற்றி வணங்க வந்த உறவல்லவோ?

இயற்கை தந்த வரம் மூப்பல்லவா?  இது
நமக்கும் நாளை வரும் நிலையல்லவா?
குழந்தை  மனதைக் கொள்ளும் முதிய்வர்க்கே- நாம்
விழைந்து சேவை செய்ய ஒரு வாய்ப்பல்லவா?
இளமை ஓடி விடும் முதுமை கூடிவிடும்
பிணிகள் நாடிவரும் வேளையிலே அவர்
வாட்டம் போக்குவது பெரும் சுகமல்லவோ? நாம்
வேர்களை மறவா விழுதல்லவோ?

                                                                        -காரஞ்சன்(சேஷ்)

21 கருத்துகள்:

 1. //இளமை ஓடி விடும் முதுமை கூடிவிடும்
  பிணிகள் நாடிவரும் வேளையிலே அவர்
  வாட்டம் போக்குவது பெரும் சுகமல்லவோ?
  நாம் வேர்களை மறவா விழுதல்லவோ?//

  அருமையான வரிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!
   -காரஞ்சன்(சேஷ்)

   நீக்கு
 2. நண்பரின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 3. அருமையாக இருந்தது ஒவ்வொரு வரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
   -காரஞ்சன்(சேஷ்)

   நீக்கு
 4. யார் பாடியும் யாரும் திருந்த மறுக்கிறார்கள் . நம்மை நாம் திருத்திக் கொள்வது நல்லதோ என்று தோன்றுகிறது .

  பதிலளிநீக்கு
 5. "இளமை ஓடி விடும் முதுமை கூடிவிடும்
  பிணிகள் நாடிவரும் வேளையிலே அவர்
  வாட்டம் போக்குவது பெரும் சுகமல்லவோ? fantastic!"

  Shanmugasundaram :

  பதிலளிநீக்கு
 6. நம் பெற்றோர்களை பேணிக்காப்பது நம் கடமை. அதை நாம் உளமகிழ்ந்து செய்ய வேண்டும். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 8. அருமையான கவிதை
  ஆழமான கவிதை
  நினைவில் நிற்கும் கவிதை
  நெஞ்சை உருக்கும் கவிதை
  இளையவர்களின் உள்ளத்தை
  தொடும் கவிதை
  பாராட்டுக்கள்

  கூட்டு குடும்பங்கள் சிதறிபோனதற்கு
  இளசுகள் மட்டும் காரணம் அல்ல
  பெரிசுகளும்தான் காரணம்
  சிறுசுகளுக்கு எதிலும் சுதந்திரம் அளித்ததுமில்லை
  அவர்களின் விருப்பம் என்ன என்று
  எந்நாளிலும் கேட்டறிந்ததுமில்லை

  தான்தான் குடும்பத்தின் தலைவன் என்று
  சர்வதிகாரபோக்குக்கு அஞ்சித்தான் குடும்பம்
  கூடியிருந்ததே அன்றி அன்பினால் அல்ல

  அனைவரும் தினம் கூடிமனம் விட்டு பேசி
  விட்டுகொடுத்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு
  வாழ்ந்த குடும்பங்கள் அன்றும் மகிழ்ச்சியாய்இருந்தன.
  இன்றும் இருக்கின்றன என்றும் மகிழ்ச்சியாய் இருக்கும் .

  அன்பால் கட்டிபோட்ட குடும்பங்கள்
  இன்றும் முதியவர்களோடு
  அன்பால் கட்டுண்டு கிடக்கின்றன

  ஓயாத கண்டிப்பும்அகந்தையும்
  கொண்ட குடும்ப தலைவர்கள்
  ஓரமாக ஒதுக்கப்பட்டு விட்டனர்
  இளைய தலைமுறைகளால் ,
  என்ன செய்ய ?
  புலம்பி என்ன பயன் ?
  எல்லாம் காலத்தின் கோலம்.

  என்னுடைய முதியோர் தின பதிவை
  பார்க்க வேண்டுகிறேன்
  (
  http://kankaatchi.blogspot.in/2012/09/blog-post_6145.html

  பதிலளிநீக்கு
 9. அன்பால் கட்டிபோட்ட குடும்பங்கள்
  இன்றும் முதியவர்களோடு
  அன்பால் கட்டுண்டு கிடக்கின்றன

  ஓயாத கண்டிப்பும்அகந்தையும்
  கொண்ட குடும்ப தலைவர்கள்
  ஓரமாக ஒதுக்கப்பட்டு விட்டனர்
  இளைய தலைமுறைகளால் ,
  என்ன செய்ய ?
  புலம்பி என்ன பயன் ?
  எல்லாம் காலத்தின் கோலம்.

  /உண்மைதான்! தங்களின் பதிவு மனம்கவர்ந்தது! நன்றி!

  பதிலளிநீக்கு
 10. இளமை ஓடி விடும் முதுமை கூடிவிடும்
  பிணிகள் நாடிவரும் வேளையிலே அவர்
  வாட்டம் போக்குவது பெரும் சுகமல்லவோ? நாம்
  வேர்களை மறவா விழுதல்லவோ?//
  கண்ணில் நீரை வரவழைத்த வரிகள்.
  அருமை.

  பதிலளிநீக்கு
 11. தோட்டத்துச் செடிகளாய் இருந்தவர்கள்
  தொட்டிச் செடிகளாய்!


  வேர்களை மறவாத விழுதுகளுக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு