தழைத்திருந்த வேளையிலே
கிளைக் கரங்கொண்டு
வெயிலை நிழலாய்
வீழ்த்தி நின்றிருந்தோம்!
வாட்டிய "தானே" எம்மை
கோட்டோவிய மாக்கியது!
நம்பிக்கை வேர்களால்
பூமியைப் இறுகப்பற்றி
வாழ வரம் கேட்கிறோம்!
கொஞ்சி மகிழ்ந்த பறவைகளே
அஞ்சியதோ அருகில் வர?
மாலைக் கதிரவனோ
மாறிடும் இந்நிலையென
வண்ண முகம் காட்டி
வானில் மறைகின்றான்!
நாங்கள் துளிர்த்தெழுந்தோம்!
பாடும் பறவையினம் மீண்டும்
கூடி மகிழுதிங்கே
வாடும் மனிதர்களே!
பாடம் ஒன்றுரைப்பேன்!
காலம் மருந்தாகி
கடுந்துயர் கரைத்திடுமே!
நம்பிக்கை துணையானால்
நாளை நமதன்றோ!
(தானே புயலின் தாக்குதலுக்கு உள்ளான மரம்-தற்போது மீண்ட நிலையில்
நான் எடுத்த படங்கள்)
நம்பிக்கையூட்டும் வரிகள் அருமை .
பதிலளிநீக்குதங்களின் பாராட்டிற்கு நன்றி!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
//நம்பிக்கை வேர்களால்
பதிலளிநீக்குபூமியைப் இறுகப்பற்றி
வாழ வரம் கேட்கிறோம்!//
// நம்பிக்கை துணையானால்
நாளை நமதன்றோ!//
நம்பிக்கையூட்டும் நல்ல வரிகள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
நன்றி ஐயா!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
நம்பிக்கையூட்டும் கவிதை.... வாழ்த்துகள் சேஷ்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே!
நீக்கு"megavum arumai"-Kasthuri Balaji
பதிலளிநீக்குThank You!
நீக்குvaarthai pravaagam...unnatham...nanbane...mayavarathaanmgr
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குகாலம் மருந்தாக
பதிலளிநீக்குகடுந்துயர் கரைத்திடுமே!
நம்பிக்கை துணையானால்
நாளை
நமதன்றோ!
nice...
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
fantastic realy nice
பதிலளிநீக்குanthuvan cuddalore
thank you for your comments
நீக்குநம்பிக்கை வேர்களால்
பதிலளிநீக்குபூமியைப் இறுகப்பற்றி
வாழ வரம் கேட்கிறோம்!//
நம்பிக்கை தானே சகலஜீவராசிகளையும் வாழவைக்கிறது.
நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்.
தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!
நீக்குநம்பிக்கை துணையானால் நாளை நமதன்றோ!/
பதிலளிநீக்குநம்பிக்கை நிறைந்த கவிதை அருமை !!
தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!
நீக்குஅன்பின் காரஞ்சன் - நம்பிக்கையினை ஊட்டும் நல்லதொரு கவிதை - தானேவிற்கு முன்னும் - பின்னும் - மரத்தின் புகைப் படம் நல்லதொரு விளக்கம். நம்பிக்கை துணையானால் நாளை நமதே ! நல்வாழ்த்துகள் காரஞ்சன் - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு( வலைச்சரம் வாயிலாக வந்தேன் )
தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!
நீக்குThank You
பதிலளிநீக்கு