வியாழன், 26 ஏப்ரல், 2012

நாளை நமதே!- காரஞ்சன்(சேஷ்)


             தழைத்திருந்த வேளையிலே
   கிளைக் கரங்கொண்டு 
வெயிலை நிழலாய்  
  வீழ்த்தி    நின்றிருந்தோம்!

       வாட்டிய "தானே" எம்மை
      கோட்டோவிய மாக்கியது!

நம்பிக்கை வேர்களால்
பூமியைப் இறுகப்பற்றி
   வாழ வரம் கேட்கிறோம்!

            கொஞ்சி மகிழ்ந்த பறவைகளே
   அஞ்சியதோ அருகில் வர?

மாலைக் கதிரவனோ
       மாறிடும் இந்நிலையென 
வண்ண முகம் காட்டி
      வானில் மறைகின்றான்!



                                                  நாட்கள் உருண்டோட
                                                  நாங்கள் துளிர்த்தெழுந்தோம்!

                                                        பாடும் பறவையினம் மீண்டும்
                                                        கூடி மகிழுதிங்கே

                                                        வாடும் மனிதர்களே!
                                                        பாடம் ஒன்றுரைப்பேன்!
                                                        காலம் மருந்தாகி
                                                        கடுந்துயர் கரைத்திடுமே!

                                                        நம்பிக்கை துணையானால்
                                                         நாளை நமதன்றோ!

                                                                                      -காரஞ்சன்(சேஷ்)
(தானே புயலின் தாக்குதலுக்கு உள்ளான மரம்-தற்போது மீண்ட நிலையில்
நான் எடுத்த படங்கள்)

21 கருத்துகள்:

  1. நம்பிக்கையூட்டும் வரிகள் அருமை .

    பதிலளிநீக்கு
  2. //நம்பிக்கை வேர்களால்
    பூமியைப் இறுகப்பற்றி
    வாழ வரம் கேட்கிறோம்!//

    // நம்பிக்கை துணையானால்
    நாளை நமதன்றோ!//

    நம்பிக்கையூட்டும் நல்ல வரிகள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நம்பிக்கையூட்டும் கவிதை.... வாழ்த்துகள் சேஷ்.

    பதிலளிநீக்கு
  4. "megavum arumai"-Kasthuri Balaji

    பதிலளிநீக்கு
  5. vaarthai pravaagam...unnatham...nanbane...mayavarathaanmgr

    பதிலளிநீக்கு
  6. காலம் மருந்தாக
    கடுந்துயர் கரைத்திடுமே!

    நம்பிக்கை துணையானால்
    நாளை
    நமதன்றோ!

    nice...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  7. நம்பிக்கை வேர்களால்
    பூமியைப் இறுகப்பற்றி
    வாழ வரம் கேட்கிறோம்!//

    நம்பிக்கை தானே சகலஜீவராசிகளையும் வாழவைக்கிறது.
    நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. நம்பிக்கை துணையானால் நாளை நமதன்றோ!/

    நம்பிக்கை நிறைந்த கவிதை அருமை !!

    பதிலளிநீக்கு
  9. அன்பின் காரஞ்சன் - நம்பிக்கையினை ஊட்டும் நல்லதொரு கவிதை - தானேவிற்கு முன்னும் - பின்னும் - மரத்தின் புகைப் படம் நல்லதொரு விளக்கம். நம்பிக்கை துணையானால் நாளை நமதே ! நல்வாழ்த்துகள் காரஞ்சன் - நட்புடன் சீனா

    ( வலைச்சரம் வாயிலாக வந்தேன் )

    பதிலளிநீக்கு