வியாழன், 3 ஜனவரி, 2013

பாதை உறங்கியதோ?-காரஞ்சன்(சேஷ்)




                                                   பாதை உறங்கியதோ?

விண்முட்ட உயர்ந்த
விளக்குக் கம்பங்களோ
பாதையோரப் பனைமரங்கள்!

கண்கொள்ளாக் காட்சியென
கவர்கிறதே நம்மையெலாம்!

விண்வெளிப் பாதையெங்கும்
வெடித்த பஞ்சுகளாய்
வெண்மேகம் அலைந்திருக்க
பயணிப்பார் யாருமின்றி
பாதை உறங்கியதோ?

--காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!                 

19 கருத்துகள்:

  1. மனிதர்கள் பயணிக்காத வரைதான் அங்குள்ள இயற்கையழகு மிஞ்சும்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல உவமை நயம்! அழகான வரிகள்! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு நன்றி! புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!

      நீக்கு
  3. நெஞ்சுக்கும் எளிதில் இறங்கும் வலிமை உள்ள கவிதை .. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு நன்றி!தங்களுக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      நீக்கு
  4. அனல் சுட்டெரிக்கும் வெய்யில்
    அதனால் பாதையில் யாரும் இல்லை
    இந்நேரம்தான் அது ஓய்வெடுக்கும் தருணம்
    படமும் கருத்தும் அருமை

    பதிலளிநீக்கு
  5. படம் அருமை ஆளில்லாதஒத்தையடிப்பாதைக்கு பொருத்தமான கவிதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. Superb sir. Picture and Poem are nice.
    Mugundan

    பதிலளிநீக்கு
  7. where u get all this picture and words superb thinking god bless you

    anthuvan cuddalore

    பதிலளிநீக்கு
  8. மிகவும் ரசித்தேன் இக்கவிதையை.....

    அதிலும் இந்த வரிகளை....

    //விண்வெளிப் பாதையெங்கும்
    வெடித்த பஞ்சுகளாய்
    வெண்மேகம் //

    பதிலளிநீக்கு
  9. தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  10. //விண்வெளிப் பாதையெங்கும்
    வெடித்த பஞ்சுகளாய்
    வெண்மேகம் அலைந்திருக்க//

    மிகவும் அசத்தலான உவமை ! ;)

    பதிலளிநீக்கு