ஞாயிறு, 11 மே, 2014

அன்னையர் தின வாழ்த்து! -காரஞ்சன்(சேஷ்)


                                                 அன்னையர் தின வாழ்த்து!


'அ" வை அறியுமுன்னே
அம்மாவை அறிந்திட்டோம்!

பத்துமாதம் சுமந்தெடுத்து
பாலூட்டி, தாலாட்டி
காலூன்றி நடப்பதை
களிப்புடன் பாராட்டி
தேவை அறிந்து
சேவை செய்வதிலே
அன்னையைப் போல்
ஆரிருப்பார் அவனியிலே!

செவிக்குணவாக
சிறந்த கதை பல சொல்லி
சீரிய சிந்தனைகள் நம்
சிந்தையில்  விதைத்திடுவாள்!
வீரத்தை ஊட்டுவதில்
விஞ்சிநிற்பாள் அன்னையுமே!

வளர்த்து ஆளாக்கி
வாழவைத்த அன்னைக்கு
அன்னையர் தினமான
இந்நாளில் வாழ்த்துரைப்போம்!


-காரஞ்சன்(சேஷ்)

ஓவிய உதவி: கூகிளுக்கு நன்றி!

20 கருத்துகள்:

 1. "அ" அருமை ஐயா...

  அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

   நீக்கு
 2. //'அ" வை அறியுமுன்னே
  அம்மாவை அறிந்திட்டோம்//

  அருமை! வாழ்த்தும் அருமை! தொடர்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி!

   நீக்கு
 3. பெயரில்லா11 மே, 2014 அன்று AM 9:23

  வணக்கம்
  ஐயா.

  கவிதை நன்றாக உள்ளது.
  அன்னையர் தின வாழ்த்துக்கள்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

   நீக்கு
 4. பெயரில்லா11 மே, 2014 அன்று AM 9:27

  அன்னையர் தினத்திற்கு அளித்த வாழ்த்து அருமை! நன்றி!-தக்‌ஷி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

   நீக்கு
 5. அன்னையர் தின அன்பு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

   நீக்கு
 6. 'அ" வை அறியுமுன்னே
  அம்மாவை அறிந்திட்டோம்! அருமை!

  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

   நீக்கு
 7. அன்னையர் தின் வாழ்த்துக்கள் . அம்மா இதுவே எனது முதல்மொழி. இன்று முழுவதும் தாயையே நினைத்திருப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி

   நீக்கு
 8. அருமை.....

  அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 10. mummy the great your worship also too good

  anthuvan cuddalore

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு