கல்லிடையே தேங்கியநீர்
கவலைமுகம் காட்டுதிங்கே!
கடல்கடந்து சென்றவர்தான்
காலத்தில் திரும்பாரோ?
பொருளின்றி வாழ்வில்லை!
பொருளொன்றே வாழ்வில்லை!
ஏக்கத்தின் தாக்கத்தை
கடல்கடந்து சென்றவர்தான்
காலத்தில் திரும்பாரோ?
பொருளின்றி வாழ்வில்லை!
பொருளொன்றே வாழ்வில்லை!
ஏக்கத்தின் தாக்கத்தை
எப்போது அறிவாரோ?
ஆறுதல் மொழிசொல்லி
அணைப்பாரோ கரங்கொண்டு?
இணைந்தமர்ந்த காட்சியுமே
இந்நீரில் தெரியாதோ?
காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
//பொருளின்றி வாழ்வில்லை!
பதிலளிநீக்குபொருளொன்றே வாழ்வில்லை!//
பொருள் பொதிந்த ஆக்கம் அருமை.
திருமணம் ஆனபின் எக்காரணம் கொண்டும் தம்பதியினர் பிரியவே கூடாது. பிரிய நினைப்பவர் எதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும்? பொருளைத்தேடி இருவரில் ஒருவர் அலைந்தால் மற்றொருவர் இதுபோல புலம்பத்தான் வேண்டியிருக்கும்.
உங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! மணமுடித்த ஓரிரு நாட்களிலேயே பிரிந்து செல்லும் தம்பதியினரின் மன ஓட்டத்தை வெளிப்படுத்த எழுதிய படைப்பு ஐயா!
நீக்குவேதனையான படைப்பு...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
நீக்குஓவியமும் அதற்கான
பதிலளிநீக்குநல்ல விளக்கமாய் அமைந்த கவிதையும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி ஐயா!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
கவிதையின் வரிகள் நன்றாக உள்ளது.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ஐயா!
நீக்குஒன்றை பெறவேண்டுமென்றால்
பதிலளிநீக்குஒன்றை இழக்கத்தான் வேண்டும்
என்பது விதி
மோர் வேண்டுமென்றால்
பால் தயிராக ஆகித்தான் தீர வேண்டும். .
திரட்டுப்பாலை சுவைக்கவேண்டுமேன்றால்
பாலை சுண்டக் காய்ச்சினால்தான் கிடைக்கும்
இதுதான் இந்த உலகத்தில்
அனைவருக்கும் எழுதாத சட்டம்.
அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு மட்டும்தான்
எல்லாம் இணக்கமாக அமையும்.
ஏக்கப்பட்டால் வாழ்வில்
தேக்கம் வந்துவிடும்.
ஆக்கமாக ஊக்கத்துடன்
சிந்தித்தால் பிரிவிலும்
இன்பத்தை காணலாம்.
அருமையான விளக்கத்துடன் கூடிய கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா!
நீக்குநன்றி ஐயா!
பதிலளிநீக்குபொருளின்றி வாழ்வில்லை!
பதிலளிநீக்குபொருளொன்றே வாழ்வில்லை!
பொருள் பொதிந்த ஆக்கம் ...!!
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
நீக்குஅன்புள்ள
பதிலளிநீக்குவணக்கம். பொருளோடு போராடலும் அதற்காகக் காத்திருத்தலுமே பலரின் வாழ்க்கையாய் கழிகிறது. ஜிட்டு சொன்னதுபோல விழிப்புணர்வுதான் வாழ்தலின் வழி. வாழ்த்துக்கள்.
தங்களின் வரவு மகிழ்வளித்தது! வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!
நீக்குநல்ல கவிதை. மனதைத் தொட்டது.
பதிலளிநீக்குதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி நண்பரே!
நீக்குகடைசிவரிகள் நிஜமாகட்டும் விரைவில்! சோகமும் நீங்கட்டும்! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்! நன்றி!
பதிலளிநீக்குதங்களின் வரவு மகிழ்வளித்தது! வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!
நீக்குஅன்பின் காரஞ்சன் ( சேஷ் ) - கவிதை அருமை - பணி நிமித்தம் அயலகத்தில் பணி புரிய - க்டல் கடந்து சென்றவர் இன்னும் திரும்ப வில்லையே - நீரினில் தேடி - தினந்தினம் அல்லல் படும் தலைவியின் நிலைமை என்னவெண்று சொல்வது ????? - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குதங்களின் வரவு மகிழ்வளித்தது! வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!
நீக்குபிரிவு துயரம் தான். கவிதையும் பொருளும் நன்றே.
பதிலளிநீக்குநன்றி வாழ்த்துக்கள் ....!
தங்களின் வரவு மகிழ்வளித்தது! வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி
நீக்குவேதனை ததும்பும் வரிகள்
பதிலளிநீக்குதங்களின் வரவு மகிழ்வளித்தது! வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!
நீக்கு