புதன், 7 மே, 2014

வரை!- காரஞ்சன்(சேஷ்)


வரை!

வரையறுத்த தொகை   
வரைவதால் கிடைக்குமெனில்
வரையளவு உயரங்கள்
வரைபவர்க்குப் பொருட்டல்ல!
 
பார்ப்பவர் கண்களை
ஈர்த்திட வேண்டி
பாவையின் கண்களை
பாங்காய் வரைகின்றார்! 

தொங்கி வரைந்தாலும்
தொய்வில்லை ஓவியத்தில்!
எங்கிருந்து பார்த்தாலும்
பார்ப்பவரைப் பார்ப்பதுபோல்
பாவையவள் தோற்றம்!

 நாலடி உயரத்தை
நாற்பதாக்கி வரைந்தாலும்
ஏற்ற இறக்கங்கள்      
என்றும் இவர்வாழ்வில்!

 வரைதலில் சிகரம்
தொட்ட இவர்-தம்
வாழ்வில் உயர்ந்திட
வாழ்த்துரைப்போமே!
-காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவி: மாயவரத்தான் எம்.ஜி.ஆர். வலைப்பூ

20 கருத்துகள்:

  1. பெயரில்லா7 மே, 2014 அன்று 9:44 PM

    வணக்கம்
    ஐயா.

    உண்மையான வரிகள் ஐயா. ..கவிதையை ரசித்தேன் வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி ஐயா!

      நீக்கு
  2. //வரைதலில் சிகரம்
    தொட்ட இவர்-தம்
    வாழ்வில் உயர்ந்திட
    வாழ்த்துரைப்போமே!//

    இது ’வரை’ எல்லா வரிகளுமே அருமை !

    பதிலளிநீக்கு
  3. அன்பின் காரஞ்சன் - அருமையான கவிதை - படம் சூப்பர் -

    //
    தொங்கி வரைந்தாலும்
    தொய்வில்லை ஓவியத்தில்!
    எங்கிருந்து பார்த்தாலும்
    பார்ப்பவரைப் பார்ப்பதுபோல்
    பாவையவள் தோற்றம்!

    வரைதலில் சிகரம்
    தொட்ட இவர்-தம்
    வாழ்வில் உயர்ந்திட
    வாழ்த்துரைப்போமே!
    //

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி ஐயா!

      நீக்கு
  4. படமும் வரியும் வெகு அருமை... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி ஐயா!

      நீக்கு

  5. தொங்கி வரைந்தாலும்
    தொய்வில்லை ஓவியத்தில்!

    அழகுக்கலையை
    அழகாய் வரைந்த கவிதை..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

      நீக்கு
  6. பெயரில்லா8 மே, 2014 அன்று 11:26 AM

    வரைந்த படத்திற்கு வரிகள் அருமை! -தக்‌ஷி

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

      நீக்கு
  8. நாலடி உயரத்தை
    நாற்பதாக்கி வரைந்தாலும்
    ஏற்ற இறக்கங்கள்
    என்றும் இவர்வாழ்வில்!
    யதார்த்த வரிகள்! நன்று! தொடர வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

      நீக்கு
  10. முகத்தின் மேல் ஒரு பயணம்!ஓவியம் சூப்பர்!!

    பதிலளிநீக்கு