புதன், 16 ஜூலை, 2014

வரம் வேண்டி! -காரஞ்சன்(சேஷ்)

!


வரம் வேண்டி!

என்னைப்போல் குழந்தைகள்
எல்லோர்க்கும் கல்வி வேண்டும்!
புத்தகச் சுமைகுறைக்கும்
புதுக்கல்வி முறை வேண்டும்!
இளமையில் வறுமை
இல்லாத நிலை வேண்டும்!
குழந்தைத் தொழிலாளர்முறை
வி(ரை)ழைந்தொழிக்க வழிவேண்டும்!
இத்தனையும் நீ அருள
எத்தனை வலம் வரவேண்டும்?
                                                             -காரஞ்சன்(சேஷ்)
                                                                                                                  பட உதவி: கூகிளுக்கு நன்றி!

20 கருத்துகள்:

  1. வேண்டுதல் பலிக்கட்டும். அருள் மழை பொழியட்டும். வேண்டிய வரம் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. உண்மைதான் ஐயா! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  3. அந்த குழந்தையின் வேண்டுதல் பலிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  4. அருமையான கவிதை.குழந்தைகளின் வேண்டுதல் பலிக்கட்டும்.
    படங்கள் மனதை கனக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  5. அன்பின் காரஞ்சன் ( சேஷ் ) - குழதைகளீன் பிரார்த்தனை பலிக்கும் - இதற்கெல்லாம் இறைவனுக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டாம் - கேட்பது அனைத்தும் கிடைக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளித்தது ஐயா! பிறர் நலனுக்காக தன் வருத்தம் பாராது வேண்டுவதாக படைத்திருந்தேன்! தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  6. எத்தனை முறை வலம்
    வந்தாலும் ஒன்றும் நடவாது

    வேலையில்லா திண்டாட்டம் ஒழியவேண்டும்.
    அரசு ஏழை மக்களின் பசி போக்க நிரந்தரமான
    ஒரு திட்டத்தை செயல் படுத்தவேண்டும்.

    சட்டம் இயற்றிவிட்டால் மட்டும் போதாது
    குழந்தை தொழிலாளர்களின் வாழ்க்கையில்
    அக்கறை கொண்ட நிரந்தர அமைப்புகளை ஏற்படுத்தி
    அவர்களின் வளமான எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்க வேண்டும்

    குழந்தைகள்நலனில் அக்கறை கொண்ட ஆட்சி
    அமைந்தால்தான் குழந்தை தொழிலாளர் முறை ஒழியும்.

    கல்விக் கொள்ளையர்கள் வறுமையில் வாடும்
    குழந்தைகளை தத்தெடுத்து கல்வி அளித்தார்கள் என்றால்
    குழந்தை தொழிலாளர் முறை ஒழியும்

    குடி கெடுக்கும் சாராயக் கடைகளை அரசு மூடினால்
    இந்த பிரச்சினை தீரும்.

    ஆனால் இவை எல்லாம் பகற்கனவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் ஆதங்கம் நியாயமான ஒன்றுதான்! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
    2. வேண்டுதல் பலிக்கட்டும் என்று ஆசி வழங்குகிறேன்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு