புதன், 15 அக்டோபர், 2014

இதயத்தில் ஓர் உதயம்! -காரஞ்சன்(சேஷ்)


 
இதயத்தில் ஓர் உதயம்!


படிந்த புழுதியை
எப்போதாவது வரும் மழை
கழுவிக் களைவதைக்
கண்டு களிக்கையில்.....
 
முகமறியா மனிதர்களை
சுகமான குரலால்
துதிபாடித் துயிலெழுப்பும்
குயிலோசையைக் கேட்கையில்..
 
குரைத்துத் துரத்தும்
நாய்களுக்கிடையில்
எனைப் பார்த்து
வாலாட்டும் நாயினைக் காணநேர்கையில்.....
 
விரிந்த வானில்
இருளும் வேளையில்
தனித்துப் பறக்கும்
பறவையைப் பார்த்து வியக்கையில்....
 
ஒடுங்கிய தேகமும்
இடுங்கிய கண்களுமாய்
"இரட்டை மல்லி" எனக்கூவி
விற்கும் கிழவியை வியந்து பார்க்கையில்...
 
கடந்து செல்லும் ஊர்தியில்
கையசைத்துச் செல்லும்
மழலைச் செல்வங்களின்
மலர்ந்த புன்னகை மகிழ்வளிக்கையில்....


இன்னும் பல்லாண்டு
இவ்வுலகில் வாழ
ஆசை என்மனத்துள்
அன்றாடம் மலர்கிறது!
                                                  -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

20 கருத்துகள்:

  1. பல்லாண்டு வாழ்ந்து பல கவிதைகள் இயற்ற வாழ்த்துக்கள்.
    அருமையான அழகான கவிதை.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் எனது வருகை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே!!மிக்க நன்றி!!

      நீக்கு
  3. அருமையான கவிதை! மனிதர்களின் மாண்புகளை, உழைத்துப் பிழைப்பவர்களை போற்றி வியத்தலை உணர்த்திய கவிதை! தன்னம்பிக்கையை உள்ளத்தில் தோற்றுவிக்கும் கவிதை! பாராட்டுக்கள்!-தக்‌ஷி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  4. இரசித்தேன்! தொடர்க! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. இதயத்தில் மலர்ந்த மலர்ச்சியான வரிகள்..பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. இந்த அழகான அற்புதமான வரிகளின் மூலம் ஒவ்வொருவரும் இந்த உலகத்தினை இவ்வாறே பார்த்து ரஸிக்க ஆரம்பித்து விட்டால் ’இதயத்தில் ஓர் உதயம்!’ ஏற்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

    அருமையான ஆக்கத்திற்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் மிகவும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  7. எனக்கும் பல்லாண்டு வாழவேண்டும் என்று ஆசைதான். உங்களைப் போல் இவ்வுலகைப் படிக்க ஆசை, அனைத்தையும் ஆராய்ந்தறிய ஆசை. மூட நம்பிக்கையைக் களைந்தெறிய இன்னும் சில காலம் வாழ வேண்டும் என்று ஆசை. உங்களைப் போல் அனைத்தையும் ரசிக்க ஆசை. இதை நான் சென்ற வாரம் நினைத்தேன். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் மிகவும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி!

      நீக்கு
  8. பல்லாண்டு வாழ்க
    அழியா நற் கவிதை பல படைக்க
    அருமை நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் மிகவும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் மிகவும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
    2. அன்பின் சேஷாத்ரி - அருமையான கவிதை - மழை, குயில், நாய், பறவை, கிழவி, மழலைச்சலவம் , ஆசை - அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      நீக்கு
    3. தங்களின் வருகையும் கருத்துரையும் மிகவும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!

      நீக்கு