ஞாயிறு, 16 நவம்பர், 2014

கவிதைப்போட்டியில் என் மனைவிக்கு மூன்றாம் பரிசு! -காரஞ்சன் (சேஷ்)

ரூபன்& யாழ்பாவாணன் இணைந்து தீபாவளித் திருநாளை ஒட்டி நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்(2014 ) வெளியாகி உள்ளன. இதில் என் மனைவிக்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! 

என் மனைவியின் கவிதைகள் இதோ:

ஓவியக் கவிதை:





வண்ண மலர்ச்சரத்தை 
வாடுமுன்னே சூட்டிவிடு!
புத்தாடை உடுத்தி
புன்முறுவல் பூத்து
மன்னவன் பார்த்திடவே
மலர்ந்திங்கு நின்றாயோ?

ஓவியமாய் உனைப்பார்த்துக்
காவியங்கள் படைப்பானோ?
பிடியிடையில் மலர்க்கூடை
உடைக்கேற்ற பூச்சரங்கள்!

காந்தக் கண்ணாலே
கவர்ந்தாயோ மன்னவனை!
சார்ந்து நிற்பவளின்
சஞ்சலங்கள் அறியானோ?

கஞ்சிக்குள் உப்பாக
கலந்திட்ட அவன்நினைவால்
வஞ்சியவள் நெஞ்சத்தில்
கொஞ்சமல்ல கற்பனைகள்!

பூத்த புன்னகையும்
பூவிதழ் தேன்சுவையும்
மேவிய காதலினால்
மென்மேலும் வளராதோ?
  
நித்திரையில் முத்திரையாய்
நின்றிருக்கும் மன்னவனே!
வண்ண மலர்ச்சரத்தை
வாடுமுன்னே சூட்டிவிடு!

இரண்டாவது கவிதை:

தழைக்காதோ தாயகமே!

நாட்டின் உயர்வுக்கு
நாளுமொரு திட்டம்!
வீணர்கள் சிலராலே
விழலுக்கு நீராக!

எங்கே பிழை என்று
ஏங்கிநாம் தவிக்கின்றோம்!
தாங்கிவரும் செய்திகளோ
தலைக்குனிவைத் தந்திடுதே!

சிறுமியர்க்குக் கொடுமைகள்!
வறுமையால் தற்கொலைகள்!
கற்பழிப்பு, கொலைகளெலாம்
ஏற்புடைத்தா? எண்ணிடுவோம்!

மதுவுக்கு அடிமையென
மயங்கிக் கிடப்போரின்
குடும்பங்கள் சீரழிந்து
படுந்துயரம் பரிதாபம்!

ஒருதலைக் காதலுக்கு
உடன்படவில்லையெனில்
தெருவழி வரும்போது
திராவகத்தை வீசுவதா?

உள்ளத்தில் தெளிவுடனே
ஒழுக்கமாய் வாழ்ந்திட்டால்
விழுமிய நிலையடைந்து
தழைக்காதோ தாயகமே!-  

-----முனைவர். இரா.எழிலி புதுச்சேரி

போட்டியில் பரிசுபெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
போட்டியை அறிவித்து வெற்றிகரமாக நடத்தி முடித்த திரு.ரூபன் மற்றும் யாழ்பாவாணன் இருவருக்கும் பாராட்டுகள். போட்டி சிறப்பாக நடைபெற உதவிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் நடுவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்!

-காரஞ்சன் (சேஷ்)

30 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா!

    தங்கள் மனைவிக்குத்தான் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடமென இப்போதுதான் அறிகிறேன் இங்கு!
    மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்!

    யாரோ வலைத்தளமற்றவர் மூன்றாமிடத்தில் வாழ்த்த வழி இல்லையே என வாழாதிருந்தேன்!

    தங்களுக்கும் தங்கள் மனைவிக்கும்
    அன்புடன் என் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி! பரிசுபெற்றமைக்கு நல்வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  3. எழிலிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள் நண்பரே!
    பரிசில் விரைவில் அனுப்பிவைக்கப்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  6. எங்கள் வாழ்த்துகளையும் சொல்லி விடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி! தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டேன். மிக்க நன்றி என தங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார்கள்!

      நீக்கு
  7. 'கஞ்சிக்குள் உப்பாக
    கலந்திட்ட அவன்நினைவால்
    வஞ்சியவள் நெஞ்சத்தில்
    கொஞ்சமல்ல கற்பனைகள்!' -

    சொல்லழகால் பொருளழகால்
    சொக்கவைக்கும் கவிதையினைச்
    சொல்லும் திறத்தாலே
    சொன்னாரோ கவிப்பெயரை?

    நன்றுமிக நன்றுநண்ப,
    இன்றே வலைப்பக்கம்
    ஒன்றை அமைத்துகவி
    நன்றாய்த் தொடர்ந்திட
    நல்லவழி செய்திடுவீர்!

    படைப்பாற்றல் தம்பதியர் தமிழில் மிகக்குறைவு.
    தடைப்படாது இருவருமே தமிழ்ப்படைப்பில் புகழ்பெறுக
    தங்கள் இருவர்க்கும் எங்களின் வாழ்த்துகள்!
    அறியத் தந்தமைக்கு அன்பான நன்றிபல.வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! வாழ்த்துரைத்தமைக்கு மிக்க நன்றி! விரைவில் ஒரு வலைப்பூ துவங்கி படைப்பினைத் தொடர வகை செய்கிறேன் ! நன்றீ ஐயா!

      நீக்கு
  8. உள்ளத்தில் தெளிவுடனே
    ஒழுக்கமாய் வாழ்ந்திட்டால்
    விழுமிய நிலையடைந்து
    தழைக்காதோ தாயகமே!-

    அருமையான வரிகள். மேன்மேலும் பல பரிசுகள் பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  9. அப்பப்பா நீரிருவர் அன்னைதமிழ் கற்றவராய்
    ஒப்பப்பா இல்லையென ஓதிவிட்டீர்!- செப்பப்பா!
    வாழ்க வளமுடனே வாழ்கவென வாழ்த்தோடு
    சூழ்க என்றும் சுகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  10. வாழ்த்துக்கள் எழிலி....! வலைதளம் அமைத்து அசத்துங்கள் !

    பதிலளிநீக்கு
  11. பரிசு பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  13. அன்பின் காரஞ்சன் மற்றும் முனைவர் இரா எழிலி

    கவிதைகள் அனைத்துமே அருமை - நன்று நன்று

    மேலும் மேலும் நல்ல கவிதைகளைப் படைக்க நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு