சனி, 8 நவம்பர், 2014

திரு வைகோ அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டி நிறைவுவிழா-பாராட்டுமடல்!-காரஞ்சன்(சேஷ்)மலைக்கோட்டை நகர்வாழும்
மாமனிதர் பேர்தன்னை
வைகோ என உரைத்து
வலையுலகம் போற்றுதிங்கே!

வையகத்தில் கோவென்பார்!
ஆனால் நீரோ
வலையுலகின் கோவானீர்!
நிலையான புகழென்றும்
நிச்சயம் உமக்குண்டு!

அருட்கண் பார்வையினை
அருளிவிட்டாள் கலைமகளும்!
திறமையுடன் படைக்கின்றீர்
திகட்டாத தெள்ளமுதை!

கண்பட்ட பொருளெல்லாம்
கதைக்கரு ஆவதென்ன?
எண்ணத்தில் வடிவமைத்து
எழுதுகின்றீர் பலகதைகள்!

ஊருணி நீரன்றோ
உம்கையில் கதைக்கருக்கள்!
வெளிவந்த படைப்புகளோ
விளம்பிடுதே உம்திறத்தை!

திட்டமிட்டுச் செயலாற்றி
எட்டுகின்றீர் உம் இலக்கை!
திடமான மனம்கொண்டு
இடர்களுக்கு விடைகொடுத்தீர்!

அறிவித்தீர் போட்டியொன்றை!
அருந்தவப் பயனைடைந்தோம்!
கரும்புதின்னக் கூலியென்றால்
விரும்பாதோர் யாரிருப்பார்?

வெள்ளியெழும்புகையில்
வெளிவருமே ஒருகதையும்!
வியாழன் உறங்குமுன்னே
விமர்சனங்கள் உமையடையும்!

செவ்வாய் மலராதோ? என
செய்திக்குக் காத்திருப்போம்!
வாயார வாழ்த்தியங்கு
வந்திருக்கும் உம்மடலும்!

நடுவர் யாரென்றே
நாமறியா வண்ணம்
கடந்தன சிலவாரம்
காத்திருந்தோம் விடையறிய!

நடுவரின் சிரமத்தை
நாமறிய ஒருபோட்டி!
விதவிதமாய் விமர்சனங்கள்!
விழிபிதுங்கிப் போனோம் நாம்!

திறம்பட செயலாற்றி
தேர்ந்தெடுத்த விமர்சனங்கள்
அறிவித்தது அவர்திறத்தை!
அயராத அவருழைப்பை!
  
விமர்சனம் எதுவென்று
விளக்கிய விதம் அருமை!
அன்னாரின் உழைப்பினையே
நன்றியுடன் போற்றிடுவோம்!

நாற்பது வாரங்கள்
விரைந்து கரைந்துவிட
வெற்றிவிழாக் காணும்
வேளையை நாமடைந்தோம்!

திண்ணியராகித் 
திறம்படச் செயலாற்றி
எண்ணிய எண்ணமெலாம்
ஈடேறக் காணுகின்றீர்!

அறிவித்தீர் பலவிருதை!
அள்ளிவிட்டீர் பரிசுகளை!
பேரறிவாளன் திருவுக்கு
வேறேதும் விளக்கமுண்டோ?
  
தமிழ் வளரத்தொண்டாற்றும்
உமைப்போற்றும் வலையுலகம்!
ஆழிசூழ் இவ்வுலகில்
வாழிய நீர் பல்லாண்டு!
-காரஞ்சன்(சேஷ்)

23 கருத்துகள்:

 1. ’பா’ எழுதி
  பா ராட்டியுள்ள
  பா சமுள்ள
  பா ண்டிச்சேரி
  பா வலுருக்கு என்
  பா ராட்டுகள்
  VGK

  பதிலளிநீக்கு
 2. பாராட்டுக் கவிதை அருமை! திரு வைகோ அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்! தொடர்க உமது வலையுலக சேவை!

  பதிலளிநீக்கு
 3. திரு வைகோ அவர்களை பரவசப்படுத்தும் வாழ்த்துக்கள் . பாராட்டும் படி படைத்த பாவெல்லாம் உம் புகழ் பேசும். அருமை அருமை. வாழ்த்துக்கள் ...!
  திரு வைகோ அவர்களுக்கும் என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.....!

  என் தளம் வருகை தர வேண்டுகிறேன்.
  http://kaviyakavi.blogspot.com/2014/10/blog-post_25.html#comment-form

  பதிலளிநீக்கு
 4. பாராட்டுக் கவிதை அருமை! பரிசுகல் பல பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!-தக்‌ஷி

  பதிலளிநீக்கு
 5. பாராட்டுக் கவிதை தேவை திரு வை.கோ விற்கு. வலை உலகின் நாயகனாய் திகழும் வை. கோ. மிக அருமையாக சிறுகதைப் போட்டி நிகழ்வை நடத்தியிருந்தார். நேரம் தெரிந்து கவிதை வழங்கி வாழ்த்திய உங்கள் கவிதை அருமை. மிகச் சரியாக எழுதியிருக்கின்றீர்கள்

  பதிலளிநீக்கு
 6. அன்புடையீர்,

  வணக்கம்.

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

  மேற்படி பதிவினில் அறிவிக்கப்பட்டுள்ள தங்களுக்கான பரிசுத்தொகை இன்று 10.11.2014 திங்கட்கிழமை தங்களின் வங்கிக்கணக்கினில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  தங்களுக்கான பணம் கிடைக்கப்பட்ட விபரத்தை தாங்கள் உறுதிசெய்து மேற்படி பதிவினில் ஓர் பின்னூட்டம் கொடுத்தால் மேலும் மகிழ்ச்சியடைவேன். அவசரம் இல்லை. தங்களால் முடிந்தபோது, செளகர்யப்பட்டபோது உறுதி செய்தால் போதுமானது.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரிசுத்தொகை கிடைக்கப்பெற்றேன் ஐயா! பின்னூட்டம் வழியும் தெரிவித்துல்ளேன்! மிக்க நன்றீ சார்!

   நீக்கு
 7. அன்பின் சேஷாத்ரி - பாராட்டு மடல் கவிதை அருமை - மிக மிக இரசித்தேன் - அருமை நண்பர் வை.கோ கொடுத்து வைத்தவர்.

  அன்பின் வை.கோ மற்றும் சேஷாத்ரி
  பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! பாராட்டிற்கு மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 8. அழகான பாராட்டுக்கவிதை. பாராட்டுகள்.
  \\தமிழ் வளரத்தொண்டாற்றும்
  உமைப்போற்றும் வலையுலகம்!
  ஆழிசூழ் இவ்வுலகில்
  வாழிய நீர் பல்லாண்டு!\\
  கோபு சார் அவர்களை உங்களுடன் இணைந்து நாங்களும் வாழ்த்துகிறோம். இனிய வாழ்த்துகள் கோபு சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! திரு வை கோ அவர்களை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!

   நீக்கு
 9. ஆழிசூழ் இவ்வுலகில்
  வாழிய நீர் பல்லாண்டு!

  அருமையான கவிதை.பாராட்டுக்கள்... வாழ்த்துகள்.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி!

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 11. Casino Game For Sale by Hoyle - Filmfile Europe
  https://vannienailor4166blog.blogspot.com/ casino-games › casino-games › casino-games › nba매니아 casino-games Casino Game for goyangfc.com sale by Hoyle on Filmfile Europe. Free shipping 1xbet korean for most countries, no download required. Check the septcasino deals we have.

  பதிலளிநீக்கு