செவ்வாய், 6 மார்ச், 2012

அருவி!- எனது மகள் எழுதிய கவிதை

அருவி! (என் மகள் எழுதிய கவிதை)

                                     நீரெனும்  மகளாகத் தாய் மடியில்
  மழையெனும் பாலை அவளூட்ட
 மலையெனும் தந்தை கண்டு சிரிக்கிறாள்!
             தென்றல் யாழ் மீட்டித் தாலாட்ட  
                                    திங்கள் அமுதூட்டும் -அவளுக்கும்
  விண்மீன்கள் பலகதைகள் பகரும்!

                                   கடலெனும் கணவனைக் கண்டவுடன் 
  காதலில் விழுந்து கரைகிறாள்!
                                  அலையெனும் நரைகண்ட பின்பும்
  அன்பிற்கு அணைகாண வழியில்லை!
                                   இன்றும் மகிழ்வுடன் பொங்கி
   அவளும் விழுகிறாள் அருவியாய்!

                                                                                                          சே.பவித்ரா
படம்:கூகுளுக்கு நன்றி!

15 கருத்துகள்:

  1. கம்பன் வீட்டுக் கட்டுத்தறி.... அதுவும் அப்பா, தாத்தா எல்லோரும் கவிதைகளில் கலக்குபவர்கள்.....

    உங்கள் மகள் பவித்ராவிற்கு வாழ்த்துகள்..... தொடர்ந்து எழுதச் சொல்லுங்கள்....

    பதிலளிநீக்கு
  2. இயற்கையில் தொடங்கி சமூக அவலங்களை துவைக்கும் கவியாய் உங்கள் மகள் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி ஐயா!

      -சே.பவித்ரா

      நீக்கு
  3. நல்லதொரு கவிதை மழை பொழிந்துள்ள தங்கள் மகள் செள. பவித்ராவுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      -சே.பவித்ரா

      நீக்கு
  4. பவித்ராவுக்கு வாழ்த்துகள். மென்மேலும் தொடரட்டும் இந்த பணி.

    பதிலளிநீக்கு
  5. பவித்ரா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  6. "pavithravikku enadhu vazhthugal"

    -KASTHURI BALAJI

    பதிலளிநீக்கு
  7. பவித்ரமான கவிதை.
    உயர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு