வியாழன், 1 மார்ச், 2012

நேச மலர்கள்!- காரஞ்சன்(சேஷ்)


நேச மலர்கள்!

காற்றின் தழுவலில்
கட்டுண்ட மரமிங்கு
புன்னகை பூக்கிறதோ
பூக்களைத் தூவி!

தாலாட்டும் காற்றை
தழுவமுயன்ற மலர்கள்
தரையில் வீழ்ந்தனவோ?

பூத்திருக்கும் மரத்தடியில்
காத்திருக்கும் எனக்கு
காதல்மொழி பேச
கற்றுக்கொடு காற்றே!
சொன்ன மொழி என்ன?
இத்தனை மலர்கள்
மயங்கி விழுகிறதே!

வளர்ந்த மரமிங்கு
வளர்க்கின்ற வேரை
வணங்கிடுதோ மலர்தூவி!

உதிர்ந்தாலும் உரமாகி
உனைக்காப்போம் என
உரைக்கின்றனவோ
மலரும் சருகும்?
                                                  -காரஞ்சன்(சேஷ்)

22 கருத்துகள்:

 1. //பூத்திருக்கும் மரத்தடியில்
  காத்திருக்கும் எனக்கு
  காதல்மொழி பேச
  கற்றுக்கொடு காற்றே!
  சொன்ன மொழி என்ன?
  இத்தனை மலர்கள்
  மயங்கி விழுகிறதே!//

  ஆஹா என்னதோர் கேள்வி....

  அழகிய வார்த்தைப் பிரயோகங்கள் நண்பரே....

  நல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி நண்பரே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு மரத்தின் அடியில் வீழ்ந்திருந்த மலர்களைப் பார்த்ததும் என் மனதில் மலர்ந்த கவிதை!

   வருகைக்கும் தங்களின் கருத்துப் பதிவிற்கும் நன்றி நண்பரே!

   காரஞ்சன்(சேஷ்)

   நீக்கு
  2. பூத்திருக்கும் மரத்தடியில்
   காத்திருக்கும் எனக்கு
   காதல்மொழி பேச
   கற்றுக்கொடு காற்றே!
   சொன்ன மொழி என்ன?
   இத்தனை மலர்கள்
   மயங்கி விழுகிறதே! Fantastic!

   நீக்கு
  3. நண்பருக்கு நன்றி!

   காரஞ்சன்(சேஷ்)

   நீக்கு
 2. //உதிர்ந்தாலும் உரமாகி
  உனைக்காப்போம் என
  உரைக்கின்றனவோ
  மலரும் சருகும்?//

  மிகவும் அருமையான வரிகள்.
  என் அன்பார்ந்த பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா! தங்களின் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி!

   காரஞ்சன்(சேஷ்)

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

   -காரஞ்சன்(சேஷ்)

   நீக்கு
 4. மரத்தைக் காக்க உதிர்ந்தாலும் உரமாகும் மலரும் சருகும்! அற்புதமான வரிகள்!மரத்திடம் மனிதன் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் அதிகம்!
  பிள்ளைகள் தாங்கி நின்றால் முதியோர் இல்லங்கள் இல்லாமற்போகும் என்பதில் ஐயமில்லை!

  நல்ல கவிதை! பாராட்டுக்கள்!

  சியாமளா

  பதிலளிநீக்கு
 5. சொன்ன மொழி என்னவோ. . . .
  மயக்கும் மலர்களே மயங்கின ...
  நல்ல கேள்வி ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
   -காரஞ்சன்(சேஷ்)

   நீக்கு
 6. //வளர்ந்த மரமிங்கு
  வளர்க்கின்ற வேரை
  வணங்கிடுதோ மலர்தூவி!//

  வித்தியாசமான பார்வை. அருமையான வரிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி!

   -காரஞ்சன்(சேஷ்)

   நீக்கு
 7. உதிர்ந்தாலும் உரமாகி
  உனைக்காப்போம் என
  உரைக்கின்றனவோ
  மலரும் சருகும்?//

  மரம், செடியின் குப்பைகள் அந்தம் மரம் செடிக்கே உரம் என்பார்கள்.
  உண்மையை சொல்கிறது கவிதை வரிகள்.

  பதிலளிநீக்கு
 8. மலரும் சருகும்? உரைக்கும் மொழி உறைக்கிறது ...!

  பதிலளிநீக்கு