சுற்றமும் நட்பும்!
வற்றிய குளம் நாடி
வந்திடுமோ நீர்ப்பறவை?
வாழ்ந்த கால்த்தில்
சூழ்ந்திருந்த சுற்றம்
தாழ்கின்ற நேரத்தில்
தள்ளியே நிற்கும்!
ஆனால் தூய நட்போ...
வீழ்கின்ற தருணத்தும்
விழிநீர் துடைத்திடும்!
தவறு மிகுமெனில்
தட்டிக் கேட்டிடும்!
துவள நேர்கையில்
துன்பம் பகிர்ந்து
தோள்தந்து உதவிடும்!
உள்ளத்தின் உணர்வை
உரைக்காமல் அறிந்திடும்!
வேறிடமிருந்தும் மனதால்
ஓரிடமாக்கிடும்!
மண்ணுக்கு நீர்போல
மாந்தர்க்கு நட்பு!
நண்பர்கள் மறையலாம்
நட்புக்கு மறைவில்லை!
-காரஞ்சன்(சேஷ்)
படம்: கூகுளுக்கு நன்றி!
வற்றிய குளம் நாடி
வந்திடுமோ நீர்ப்பறவை?
வாழ்ந்த கால்த்தில்
சூழ்ந்திருந்த சுற்றம்
தாழ்கின்ற நேரத்தில்
தள்ளியே நிற்கும்!
ஆனால் தூய நட்போ...
வீழ்கின்ற தருணத்தும்
விழிநீர் துடைத்திடும்!
தவறு மிகுமெனில்
தட்டிக் கேட்டிடும்!
துவள நேர்கையில்
துன்பம் பகிர்ந்து
தோள்தந்து உதவிடும்!
உள்ளத்தின் உணர்வை
உரைக்காமல் அறிந்திடும்!
வேறிடமிருந்தும் மனதால்
ஓரிடமாக்கிடும்!
மண்ணுக்கு நீர்போல
மாந்தர்க்கு நட்பு!
நண்பர்கள் மறையலாம்
நட்புக்கு மறைவில்லை!
-காரஞ்சன்(சேஷ்)
படம்: கூகுளுக்கு நன்றி!
நண்பர்கள் மறையலாம்
பதிலளிநீக்குநட்புக்கு மறைவில்லை ...
நட்பின் இலக்கணம் . . .
கர்ணன் திரைப்படம்
புது வடிவத்தில் மீண்டும்
திரையிடப் படுகிறதாம்
நண்பேன்டா .. . . . .
நன்றி!
நீக்கு//மண்ணுக்கு நீர்போல
பதிலளிநீக்குமாந்தர்க்கு நட்பு!//
அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
நன்றி ஐயா!
நீக்கு//மண்ணுக்கு நீர்போல
பதிலளிநீக்குமாந்தர்க்கு நட்பு!
நண்பர்கள் மறையலாம்
நட்புக்கு மறைவில்லை!//
அருமையான வரிகள் நண்பரே... ரசித்தேன்...
நன்றி நண்பரே!
நீக்குநட்பின் மேன்மை எடுத்துச்சொல்லும் எத்தனைக் கவிதைகள் படித்தாலும் சலிப்பதே இல்லை. நட்பின் அருமை சொல்லும் வரிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களைத் தொடர்பதிவொன்றிற்கு அழைத்துள்ளேன். நேரமிருக்கும்போது தொடரவும்.நன்றி.
http://geethamanjari.blogspot.com.au/2012/02/blog-post_27.html
நன்றி!
நீக்குநன்றி!
பதிலளிநீக்கு