இசைக்கு இசை!
உலகின் உடன்பிறப்பாய்
உண்டானது- இசை!
உலகின் ஒவ்வோர்
அசைவும்-இசை!
ஒருங்கிணைந்து ஓசை
உருப்பெற்றால் இசை!
செவிக்கு விருந்தாகி
சிந்தை நிறைவது இசை!
வார்த்தையிலா நிலைக்கும்
வடிவம் தரும் இசை!
ஆன்மாவின் அழுக்கை
அகற்றிடுமே இசை!
இதயத் துடிப்பிலும்
இருப்பது இசை!
இசையில் சிறந்தோர்
ஈட்டுவதும் இசை!
இரண்டாம் தமிழாய்
இருப்பதும் இசை!
நோய்க்கு மருந்தாய்த்
திகழ்வது இசை!
சேய்க்கு மகிழ்வைச்
சேர்ப்பதும் இசை!
அன்றாட வாழ்விலொரு
அங்கமாம் இசை!
இசைபட வாழ
இசைவோம் இசைக்கு! -காரஞ்சன்(சேஷ்)
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி
//அன்றாட வாழ்விலொரு
பதிலளிநீக்குஅங்கமாம் இசை!
இசைபட வாழ
இசைவோம் இசைக்கு! //
சுவையான உங்கள் கவிதை இசை....
உங்களின் இசை மனதில் பசையாய் ஒட்டி விட்டது ! நன்றி நண்பரே !
பதிலளிநீக்குஇசையைப்பற்றிய மிகவும் இசைவான பதிவு.
பதிலளிநீக்குதுள்ளாத மனமும் துள்ளும்
பதிலளிநீக்குசொல்லாத கதைகள் சொல்லும் என்கிற பாடலில்
இசை குறித்தே ஒரு அருமையான இசைப் பா கொடுத்திருப்பார்
பட்டுக்கோட்டையார் அவர்கள்
அதைப் போலவே இசை குறித்து அருமையான பாடலை
கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்
மனம் கவர்ந்த பதிவு
//நோய்க்கு மருந்தாய்த்
பதிலளிநீக்குதிகழ்வது இசை!
சேய்க்கு மகிழ்வைச்
சேர்ப்பதும் இசை!//
இசை பற்றிய அருமையான கவிதை...
It is highly muscial. an very attractive way of defining" ESSAI" ,
பதிலளிநீக்கு- Shyamala .S- Pondy
இசைக்கு இசைய வைக்கும் கவிதை!
பதிலளிநீக்கு