செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

கடைக்கண் பார்வை!- காரஞ்சன்(சேஷ்)



                  கண்ணேறு பொம்மைகள்   கட்டிய கழியினை
                  கழுத்தினில் சுமந்து  கால்கடுக்க நடக்கின்றான்!
                  பலமுக பொம்மைகள்  பாரினில் மாந்தர்போல்!
                  கண்ணேறு கழிக்க     கட்டிவைக்கும் பொருட்களை
                 விற்றுத் தீர்க்க -இவன்  விழவேண்டும் பலர் விழிகளில்!

                                                                                                     --காரஞ்சன்(சேஷ்)

34 கருத்துகள்:

  1. //விற்றுத் தீர்க்க -இவன் விழவேண்டும் பலர் விழிகளில்!//

    குடுகுடுப்பாண்டி + பூம்பூம் மாட்டுக்காரர் + கிளி ஜோஸ்யம் சொல்பவர்கள் நிலைமை தான்.

    நல்லகாலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது!
    என்பார்கள். சொல்லும் அவர்களுக்கு எப்போ நல்ல காலம் பிறக்கும் என நினைத்துக்கொள்வேன், நான்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நல்ல புகைப்படம் - அதற்கேற்ற நல்ல கவிதை....

    எவ்வளவு முரண் இவர்கள் போன்றோர் வாழ்க்கையில்.....

    பதிலளிநீக்கு
  3. ஒரு சாண் வயிற்றுக்காக என்னென்ன வேலைகள் செய்ய வேண்டியுள்ளது மனித வாழ்க்கையில் !

    பதிலளிநீக்கு
  4. விற்றுத் தீர்க்க -இவன் விழவேண்டும் பலர் விழிகளில்!
    உன்னதமான வரிகள் .

    பதிலளிநீக்கு
  5. அன்பின் சேஷாத்ரி - கவிதை சொல்லும் விளக்கம் படத்தினைப் பார்த்ததும் தெளீவாகப் புரிகிறது - என்ன செய்வது - துயரம் தான் . நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. இவர்கள் வாழ்க்கைக்கு யார் கண்ணேறு கழிப்பது . வயிற்றுப் பிழைப்புக்காக வீதியெங்கும் சுற்றவேண்டிய நிலைமை. அதை வருந்தி பார்த்து நீங்கள் வரைந்த கவிதை மிக இனிமை

    பதிலளிநீக்கு
  7. கடைசி வரிகள் மனதை நெகிழ்த்தியது....

    படமும் அதற்கேற்ற கவிதையும் அருமை....

    பதிலளிநீக்கு
  8. //விற்றுத் தீர்க்க -இவன் விழவேண்டும் பலர் விழிகளில்!//
    அருமையான வரிகள்.
    சிறப்பான கவிதை.

    பதிலளிநீக்கு
  9. பிறரிடம் கைஏந்தாமல் உழைத்து வாழும் எண்ணம் அனைவரிடமும் வரவேண்டும்

    பதிலளிநீக்கு
  10. its not to be laughed. but yr saying are fine. still . .... ramanans

    பதிலளிநீக்கு
  11. வரிகளில் ஒரு உயிர்ப்பு உள்ளது .., வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. மனதில் உள்ள தளர்ச்சி நடையில் தெரிந்தாலும், நம்பிக்கை இழப்பதில்லை நமக்கும் நல்ல விடியலுண்டு என்று தொய்வில்லாமல் நடக்கின்றான்.....
    http://atchaya48.blogspot.com
    http://atchaya-krishnalaya.blogspot.com

    பதிலளிநீக்கு
  13. Given life to the seller as well as to the sold dolls . Good photography also counts to the merit of your beautiful kavithai
    - Shyamala Bsnl

    பதிலளிநீக்கு
  14. அருமையான கவிதை நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. விற்றுத் தீர்க்க -இவன் விழவேண்டும் பலர் விழிகளில்!

    விழிகளில் விழுந்து இதயமும் வயிறும் நிரம்பட்டும் !

    பதிலளிநீக்கு