நிழற்கோலம்- பலரின் பார்வையில்!
நிழற்கோலம் வரையும்
நீள்கதிர்க் கைகளைவட்டமிடும் வான்மேகம்
வந்து ஏன் தடுக்கிறதோ? -ஓவியர்
கதிரவனும் மரமும்
நிழற்கோலம் படப்பிடிப்பில்!
வான்மேகம் சொன்னது
கட்..கட்..கட். -திரைப்பட இயக்குநர்
வானின் ஒளிக்கும்
வந்ததோ தடை?
ஒளித்தடையால்
நிழல் உற்பத்தி
நின்று போனதே! -தொழிலதிபர்
கதிரவன் ஒளிவர
காத்திருந்த மரம்
மண்மீது வரைந்ததோ
மாவில்லா நிழற்கோலம்?
நிழற்கோலத்தில்
நிஜமான அசைவுகள்!
ஓசையின்றி காற்று
உயிர்கொடுத்துச் செல்கிறதோ? -கவிஞன்
நிஜம் நீ எனில்
நிழல் நான்!
-காதலன்
உயர்ந்த இடத்தின்
பார்வை படும்வரை
நிழலுலகம் நிஜமானதுதான்! -தத்துவஞானி
உறுதியுடன் உழைத்துநில்!
காலம் கைகொடுக்கும்!
உன்நிழலில் ஒருநாள்
உலகம் இளைப்பாறும்! - காரஞ்சன்(சேஷ்)
அருமையான கவிதைகள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
நன்றி ஐயா!
நீக்குமரநிழல் மனதில் பதிந்ததும் விளைந்த படைப்பு இது!
காரஞ்சன்(சேஷ்)
அருமை. அழகான வரிகள்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி!
பதிலளிநீக்குKasthuri : "mega arphutham."
பதிலளிநீக்குஅவரவர் பார்வையில் தோன்றும் எண்ணங்களுடன் கூடிய அருமையான கவிதை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு"உறுதியுடன் உழைத்துநில்!
பதிலளிநீக்குகாலம் கைகொடுக்கும்!"
அருமையான வரிகள் ! நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் சார் !
நன்றி நண்பரே!
நீக்குகாரஞ்சன்(சேஷ்)
மிக அருமையான கவிதை.... ஒரு காட்சி ஒவ்வொருவர் மனதில் எப்படித் தோன்றும் என யோசித்து எழுதி இருப்பது அழகு.
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குகாரஞ்சன்(சேஷ்)
அட, நிழற்கோலம் உருவாக்கிய மனக்கோலம் அழகு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களின் கருத்துரைக்கு நன்றி!
நீக்குநிஜம் நிழலை தரும்
பதிலளிநீக்குஒளி இருக்கும் வரை
நினைவில் எப்போதும்
நிழலாடும் உங்கள்
கவிதைகள்
பாராட்டுகள்
நன்றி!
பதிலளிநீக்கு