வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

முரண்பாடுகள் -காரஞ்சன்(சேஷ்)

                                                                   முரண்பாடுகள்!

உருவில் முரணாய்
காலம் காட்டும்
கடிகார முட்கள்!

சுவையில் முரணாய்
இனிப்பும், கசப்பும்!

வாழ்வில் முரணாய்
பிறப்பும், இறப்பும்!

மனதின் முரணாய்
நிறையும், குறையும்!

இல்வாழ்வில் முரணாய்
இன்பமும், துன்பமும்!

நாளில் முரணாய்
இரவும், பகலும்!

முடிவில் முரணாய்
வெற்றியும், தோல்வியும்!

பருவத்தின் முரணாய்
உதிர்தலும், துளிர்த்தலும்!

அறிவியலில் முரணாய்
ஆக்கமும், அழிவும்!

உணர்ச்சியின் முரணாய்
அழுகையும், சிரிப்பும்!

சொல்லில் முரணாய்
இன்சொல்லும், வன்சொல்லும்!

செய்கையில் முரணாய்
நன்மையும், தீமையும்!

நிலத்தில் முரணாய்
மலையும், மடுவும்!

உறவில் முரணாய்
நட்பும், பகையும்!

முரண்கள் தொடர
முடியும் வாழ்வே!
                                        -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

7 கருத்துகள்:

  1. contradictions, conflicts, opposites and contrasts keep the life balanced! Nice one!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையான வரிகள்.
    முரண்பாடுகள் பற்றிய இந்தக்கவிதையில் முரண்பாடுகள் ஏதும் இல்லை. எல்லாமே ஒத்துக்கொள்ள வேண்டியவைகளே தான். பாராட்டுக்கள். vgk

    பதிலளிநீக்கு
  3. அருமையான படைப்பு
    ஆழமாக சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள்
    ஒருவகையில் முரண்கள் இல்லாது போனால்
    அவையெல்லாம் இல்லாதும் போகுமோ என்கிற
    சிந்தனையும் என்னுள் வந்து போனது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. நல்ல சிந்தனை... எத்தனை எத்தனை முரண்கள்.... ரமணி சார் சொல்வது போல முரண்கள் இல்லாது போனால்....

    நல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அன்பு நண்பர் காரஞ்சன் அவர்களுக்கு,

    உங்களுக்காக ஒரு விருது காத்திருக்கிறது என் வலைப்பூவில் - வாருங்களேன்....

    http://www.venkatnagaraj.blogspot.in/2012/02/blog-post_14.html

    பதிலளிநீக்கு
  6. Very well relects the philosopy of entire lifetime in 180 degree
    comparitive statements. Good .Please contribute more and more of such kavithais -Shyamala ,Bsnl

    பதிலளிநீக்கு