மனித நேயம்!
அறிவியலில் வளர்ந்தோம்!
ஆற்றலிலே சிறந்தோம்!
ஆனால்...
நாளொரு குற்றம்!
பொழுதொரு கொலை!
தினசரி நாளிதழில்
தினமொரு செய்தி!
உலகிற்கே உணவுதரும்
உழவனுக்குப் பசிக்கொடுமை !
பசியுடன் அழும்
பச்சைக் குழந்தைகள்
குப்பைத் தொட்டிகளில்!
தொட்டில்களா தொட்டிகள்?
வளர்த்த பெற்றோர்கள்
வாடிடலாமோ?
முதியோர் இல்லங்களை
நாடிடலாமோ?
பணத்திற்காய்
மனதையும் விற்கும்
மனிதர்கள் இன்று!
வன்முறை என்பது
இவையும் தானே?
வேரறுப்போம்
இவ்வன்முறையை!
இவ்வன்முறையை!
வீறுகொள்வோம்
மனிதநேயம் மாண்புறவே!
-சே.பவித்ரா
பட உதவி: கூகுள்
//வளர்த்த பெற்றோர்கள்
பதிலளிநீக்குவாடிடலாமோ?
முதியோர் இல்லங்களை
நாடிடலாமோ?//
சிறு வயதிலேயே நல்லதோர் சிந்தனை.... நல்ல கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி பவித்ரா....
தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி ஐயா!
பதிலளிநீக்கு"பணத்திற்காய்
பதிலளிநீக்குமனதையும் விற்கும்
மனிதர்கள் இன்று!"
அருமையான கவிதை சார் ! பவித்ரா-க்கு வாழ்த்துக்கள் !
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா!
நீக்கு-பவித்ரா
தங்கள் மகள் பவித்ராவுக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅழகான விழிப்புணர்வு ஊட்டும் சிந்தனைகளைத் தந்துள்ள கவிதை.
//உலகிற்கே உணவுதரும்
உழவனுக்குப் பசிக்கொடுமை !//
சபாஷ்.
தங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி ஐயா!
நீக்கு-பவித்ரா
உலகிற்கே உணவுதரும்
பதிலளிநீக்குஉழவனுக்குப் பசிக்கொடுமை !
பசியுடன் அழும்
பச்சைக் குழந்தைகள்
குப்பைத் தொட்டிகளில்!
தொட்டில்களா தொட்டிகள்?//
அவலத்தை அரங்கேற்றிய வரிகள் விடை கிடைக்குமா ?
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!-பவித்ரா
நீக்குnice di...
பதிலளிநீக்குkalakara...:)
நன்றி!
நீக்குசிந்தனை மிகச்சிறப்பு.. மேலும் தொடர்ந்திட ஊக்கம் தாருங்கள் சார் என்னோட வாழ்த்துக்களையும் அவர்களிடம் சேர்த்து விடுங்க .. நன்றி
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி சார்!
நீக்குஎன் மகளும் தாங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறாள்
-காரஞ்சன்(சேஷ்)
//வேரறுப்போம்
பதிலளிநீக்குஇவ்வன்முறையை!
வீறுகொள்வோம்
மனிதநேயம் மாண்புறவே!//
எழுச்சிமிக்க வரிகள் பவித்ரா. பாராட்டுகள்.
தங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!
நீக்கு-பவித்ரா
மனித நேயச் சிந்தனையும் ஆக்கமும் அருமை
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!
நீக்கு-பவித்ரா
இவையும் வன்முறைதானே ...
பதிலளிநீக்குஏறத்தாழ 20 வருடங்களுக்கு முன் ஒரு பாலசந்தர் படத்தில்
திருமணத்திற்க்காக மதம் மாறச் சொல்வதும் வரதட்சனையே ...
என்று ஒரு வசனம் . . .
அதையொட்டிய .. கருத்து ..
வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!
நீக்கு-பவித்ரா
superb pavi
பதிலளிநீக்குanthuvan
Thank you
நீக்குpavithra