திங்கள், 2 ஏப்ரல், 2012

மலருக்குத் தென்றல் பகையானால்?-காரஞ்சன்(சேஷ்)

மக்காக் குப்பை மிகுமானால்-மண்ணில்
மழைநீர் இறங்க வழி ஏது?

வெளிவரும் புகையே பகையானால்
வளியில் ஓசோன் நிலையாது!

பயிருக்கு மருந்தே பகையானால் -நல்
உயிரினம் வாழ்ந்திட வழி ஏது?

உடலுக்கு உணவே பகையானால்
உயிர் வாழ்ந்திடவே வழி ஏது?

அண்டை நாடுகள் பகையானால்
சண்டை நின்றிட வழி ஏது?

உறவும் நட்பும் பகையானால்
உள்ள அமைதிக்கு வழி ஏது?

இயற்கை வளங்களைக் காத்திட்டால்

இனிக்கும் வாழ்வு புவி மீது!

வெறுப்பெனும் உணர்வை விலக்கிவிட்டால்
செருபகை தருதுயர் இனி ஏது?

 -காரஞ்சன்(சேஷ்)

34 கருத்துகள்:

  1. உறவும் நட்பும் பகையானால்
    உள்ள அமைதிக்கு வழி ஏது?

    மிகச்சரியான கேள்வி!

    நல்ல கேள்வி நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரே!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  2. அந்த சினிமா பாடல் போலவே மிக அழகாக எழுதியுள்ள வரிகளுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. "kannadasan erunthal tholil kai pottu unnai vazhithi errupar."
    -Kasthuri Balaji

    பதிலளிநீக்கு
  4. நல்ல சிந்தனைகள் அடங்கிய வரிகள் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் என் உளமார்ந்த நன்றி!
      காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  5. அந்த சினிமாப் பாடல் அதிக அர்த்தம் உள்ளது
    அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்
    அதைப் போலவே அருமையான பாடலை அதே ராகத்தில் பாடும்படியாக
    மிக நேர்த்தியாக கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்
    மனம் கவர்ந்த பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் என் உளமார்ந்த நன்றி!
      காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் என் உளமார்ந்த நன்றி!
      காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  7. நல்ல பொதுநல சிந்தனை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் என் உளமார்ந்த நன்றி!
      காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் என் உளமார்ந்த நன்றி!
      காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  9. சிந்திக்க வைக்கும் கேள்விகள் ! வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு உளமார்ந்த நன்றி!
      காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  10. அன்பு நண்பரே, சிந்திக்க வைக்கும் சீரிய வரிகளில் சிறந்த கவிதை மிக அருமை.வாழ்த்துக்கள்.
    ருக்மணி சேஷசாயி.

    பதிலளிநீக்கு
  11. தங்களின் பாராட்டிற்கும் ஆசிக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  12. உள்ள அமைதி .. ..
    அருமையான சொல்லாட்சி ...

    பதிலளிநீக்கு
  13. அருமை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா!
    காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  15. excellant what a words u have a great future hats up

    anthuvan cuddalore

    பதிலளிநீக்கு
  16. அன்பின் காரஞ்சன் ( சேஷ்)

    சிந்தனை நன்று.

    இயற்கை வளங்களைக் காத்திட்டால்
    இனிக்கும் வாழ்வு புவி மீது!

    இயற்கையினைக் காப்போம் . இன்பமாக வாழ்வோம் !

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  17. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  18. எதுவுமே மிகையாகும் போது பிரச்சனைதானே?வெறுப்பில்லா உலகம் இனி சாத்தியமா என்பது கேள்விக்குறியே?நம் மாதிரி உறவுகளை நூற்துக்கொள்பவர்கள் நிறையும் போது சாத்தியமாகும் நல்லதொரு உலகு.நல்ல படைப்பு வாழ்த்துக்கள்,நன்றி வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துப் பதிவிற்கு நன்றி ஐயா!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  19. அருமையான கவிதை. இயற்க்கை வளங்கள் மிகவும் அவசியமான ஒன்று. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு