வியாழன், 27 டிசம்பர், 2012

அணைத்திட வருவாயோ?- காரஞ்சன்(சேஷ்)


                                                                     அணைத்திட வருவாயோ?

ஆற்றின் கரையினிலே
அந்திப் பொழுதினிலே
சந்தித்த பொழுதுகளென்
சிந்தையில் தோன்றுதடி!
 
வளைந்தோடும் நீர்காட்டும்
வண்ணமிகு வான்நிறத்தை!
கண்ணிரண்டின் நீர்காட்டும்
கவலையுறும் என்னுளத்தை!

சுழித்தோடும் நீர்போல
சுற்றுதடி உன்நினைவு!
பகையாச்சு பொழுதெல்லாம்
பாவை உன் பிரிவாலே!

கழித்திட்ட காலமெலாம்
கனவென வரும்வேளை
விழிக்கிறதே விழியிரண்டும்
விழிக்கையில் நீயின்றி!
 
கோடையில் மழையொருநாள்
குடைக்குள் இருவருமாய்
பிடித்த கதைகளெலாம்
பேசியே நடந்திட்டோம்!
நனைந்தன உடைகளொடு
நம்மிருவர் இதயமுமே!

கூடிடத் துணைதேடி
கூவிடும் குயிலொன்று
இழையோடும் சோகத்தை
இன்னிசையாய் மீட்டுதடி!

மதிற்மேல் படர்ந்தகொடி
மனதினை வாட்டுதடி!
ஏக்கம் எனும்தீயை
என்னுள்ளே மூட்டுதடி!

ஏக்கப் பெருந்தீயை
என்றணைக்க வருவாயோ?

                       -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வலைச்சரத்தில் பகிர்ந்த கவிதை
 

26 கருத்துகள்:

 1. வலைச்சரத்திலும் ,இங்கும் கவிதையை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. வலைச்சரத்திலும் ,இங்கும் கவிதையை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. ஏக்கமும் தாக்கமும் உள்ள எல்லோருக்கும் பிடிக்கும்.அப்படியே இதையும் படிச்சி பாருங்க http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_17.html

  பதிலளிநீக்கு
 4. கழித்திட்ட காலமெலாம்
  கனவென வரும்வேளை
  விழிக்கிறதே விழியிரண்டும்
  விழிக்கையில் நீயின்றி!

  ஏக்கம் உணர்த்தும் கவிதை ..!

  பதிலளிநீக்கு
 5. பிரிவுத் துயரினை படிப்பவரும் உணரச் செய்து போகும்
  அருமையான கவிதை.
  விழிக்கிர விழி மனம் கவர்ந்தது
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. கவிதையில் வழியும் பிரிவுத் துயர் மனதில் ஒட்டிக் கொண்டது. மிக ரசித்தேன். அருமை!

  பதிலளிநீக்கு
 7. கவிதை அருமை
  ஆனால் அவள் திரும்பி
  வருவதும் வராததும்
  அவள் சென்றுவிட்ட
  இடத்தை பொறுத்தது

  பதிலளிநீக்கு
 8. கழித்திட்ட காலமெலாம்
  கனவென வரும்வேளை
  விழிக்கிறதே விழியிரண்டும்
  விழிக்கையில் நீயின்றி!//

  அருமையான வரிகள்,
  படிக்கையிலேயே ஓர்
  ஏக்கம் ஏற்படுகிறது.

  பதிலளிநீக்கு
 9. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 10. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு

 11. வணக்கம்!

  அணைத்திட வாவென்று அழைத்தாய்! கவிதை
  புனைந்திட மேவும் புகழ்

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்


  பதிலளிநீக்கு
 12. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 13. சுழித்தோடும் நீர்போல
  /சுற்றுதடி உன்நினைவு!
  பகையாச்சு பொழுதெல்லாம்
  பாவை உன் பிரிவாலே!/
  மூட் அவுட் பண்றியே.....நண்பா...இது.... 'நண்பா'

  பதிலளிநீக்கு