ஞாயிறு, 30 டிசம்பர், 2012

வருக புத்தாண்டே! வருக! வருக! -காரஞ்சன் (சேஷ்)


அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


வருக புத்தாண்டே! வருக! வருக!
 
ஈராறுடன்  இன்னும் ஒன்றிணைந்திட

வருக புத்தாண்டே! வருக! வருக!

மைதி நல்கிடும் ஆண்டென வருக!

ற்றொணாத் துயர்களை அகற்றிட வருக!

ன்சொல் எங்கும் எதிரொலித்திடுக!
 

கைக்குணம் எங்கும் நிறைந்திட

ழவும் தொழிலும் உலகினில் ஓங்கிட

ற்றாய் எங்கும் உவகை பொங்கிட

ங்கும் மங்கலம் என்றும் தங்கிட

ற்றம் அளிக்கும் ஆண்டென வருக!
 

யம் போக்கி அறங்கள் தழைத்திட

ற்றுமை உணர்வு உலகெலாம் உதித்திட

ரணி நின்று வன்முறை ஒழித்திட

ஒளடதம் பெருகி உறுபிணி அகற்றிட

உறுதியும் திறனும் அருள்க புத்தாண்டே!

                                                            - காரஞ்சன் (சேஷ்)

23 கருத்துகள்:

 1. அருமையான நல்ல கருத்துக்களை உரைத்த புத்தாண்டு கவிதை மிக நன்றாக இருக்கிறது.
  உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! தங்களின் வாழ்த்திற்கு நன்றி! தங்கள் அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   நீக்கு
 2. அ..ஒள வரை அனைத்துமே நன்று.இனிய நாளாக இனிவரும் நாள் இருக்க வாழ்த்துகிறேன்.

  இதையும் சேர்த்து படியுங்க
  http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_30.html

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி! தங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு
 4. புத்தாண்டு வாழ்த்துக்கள்! கவிதை சிறப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
 5. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி! தங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. அகர வரிசையில் புத்தாண்டுக்கவிதை அழகோ அழகு.
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்>

  பதிலளிநீக்கு
 7. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளிக்கிறது! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 8. தங்களின் கவிதை மிக அருமை!தொடர வாழ்த்துக்கள்!அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
  -மீரா!

  பதிலளிநீக்கு
 9. pazhaya varudathin negative aspects edhuvum kalakamal agara varisaiyel kavithai arumai

  பதிலளிநீக்கு
 10. நன்றி! அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. புத்தாண்டிற்கு வரவேற்பு,
  இடமளித்தாய்,
  எச்சம்,
  கவிதைகளும்,
  புகைப்படங்களும் அருமை ...
  வாழ்க பல்லாண்டு ,, பல கோடி நூறாண்டு .....

  பதிலளிநீக்கு
 12. நன்றி நண்பரே!தங்களுக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. அ முதல் ஔ வரை.... அருமையான கருத்துகள் சொல்லும் கவிதை - புத்தாண்டில். சிறப்பான கவிதைப் பகிர்வுக்கு வாழ்த்துகள்.

  இனிய புத்தாண்டில் மேலும் பல பதிவுகள் எழுதி சிறப்புற வாழ்த்துகள் நண்பரே.

  பதிலளிநீக்கு