வியாழன், 6 டிசம்பர், 2012

பிடிப்பு!-காரஞ்சன்(சேஷ்)


பிடிப்பு!


பிடித்தார்…
பிடித்ததனால் பிடிக்கின்றார்!
பிடிப்பதனால்
பிடித்தவர்க்கும்
பிடிக்காதவர் ஆகின்றார்!
பிடிப்பவரைப் பிடித்திட்டால்
பிடித்திடுவாரோ இனி?
பிடிப்பதனால்
பீடிக்கும் பிணிகள் பல!
பிடிக்காதீர்- புகை!
 
 




-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

29 கருத்துகள்:

  1. படித்ததும் கவிதை பிடித்தது
    பிடித்தது வெகு நேரம் பிடிவிடவும் மறுத்தது
    அருமையான அர்த்தமுள்ள சொற்ஜாலம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  3. எது ஊனம் ..
    பிடித்தது ....
    இரண்டும் அருமை நன்பரே ..
    பிடித்து
    தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  4. தங்களின் கருத்துரை ஊக்கமளிக்கிறது! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  5. எனக்கு இது பிடிக்கவில்லை...

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான்! தங்களின் வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. பிடிப்பதனால் தொடருங்கள் நண்பரே! கருத்துரைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. கற்பனையும் நன்று கவிதையும் நன்று...

    “தன்னை அழித்துப்
    பிறர்க்குதவுவது
    மெழுகுவர்த்தி..
    தன்னையும் அழித்துப்
    பிறரையும் அழிப்பது
    புகைப்பிடித்தல்!!!”

    பதிலளிநீக்கு
  9. அன்பின் காரஞ்சன் - கவிதை - கருத்து அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  10. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  11. பிடிக்க மாட்டேன் பிடிக்கவில்லை பிடித்தது உங்கள் உணர்வு

    பதிலளிநீக்கு
  12. பிடித்துப்படித்தேன். நன்றாகவே நயம்படச் சொல்லியுள்ளீர்கள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. பிடித்தவர் சொன்னால் பிடித்ததை விட்டு சுகமாய் வாழலாம்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. நச்சென்ற வரிகளில் வீச்சான விழிப்புணர்வு !

    தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  15. “தன்னை அழித்துப்
    பிறர்க்குதவுவது
    மெழுகுவர்த்தி..
    தன்னையும் அழித்துப்
    பிறரையும் அழிப்பது
    புகைப்பிடித்தல்!!!”//

    அருமையான படைப்பு. பிடித்துப் படித்தேன்.

    பதிலளிநீக்கு