திங்கள், 9 டிசம்பர், 2013

புகைப்படங்கள்!- காரஞ்சன்(சேஷ்)




கடந்த காலத்தை
கண்முன் நிறுத்தி
சிந்தையைத் தூண்டும்
சின்னங்களாய்
கருப்பு வெள்ளை
புகைப்படங்கள்!

இறந்த காலத்தை
எதிர்காலம் அறிந்திட
இறந்த காலத்தின்
நிகழ்காலப் பதிவுகளாய்
நிழற்படங்கள்!

முன்னோர் பலரின்
முகமறிய வழிவகுக்கும்!
அந்நாளின் தோற்றத்தை
எந்நாளும் பிரதிபலிக்கும்!

கடந்தகால நினைவுகளில்
கரைந்து போக வழிவகுக்கும்!
அரிய புகைப்படங்கள்
அனைத்தையும் காத்திடுவோம்!

கணினி யுகத்தினில்
காத்திட வழிஉண்டு!
ஏற்றிடுவோம் கணினியிலே
எதிர்காலம் அறிந்திடவே!

-காரஞ்சன் (சேஷ்)


பட உதவி: கூகிளுக்கு நன்றி!

22 கருத்துகள்:

  1. புகைப்படம் பற்றிய பொக்கிஷப் பதிவு அருமை.

    //கணினி யுகத்தினில்
    காத்திட வழிஉண்டு!
    ஏற்றிடுவோம் கணினியிலே
    எதிர்காலம் அறிந்திடவே!//

    ஆம். சுலபமாக சேமிக்க முடிகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  2. சரியாகச் சொன்னீர்கள்
    இப்போது எடுக்கிற வண்ணப் படத்தை விட
    அப்போதைய கருப்பு வெள்ளைப் படத்தில்
    ஒரு அன்னியோன்யம் இருப்பது
    புரிந்தவர்களுக்குத்தான் புரியும்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருப்பு வெள்ளைப் படங்களில் ஏதோ ஒரு கலைநயம் இருப்பதுபோல் உணர முடிகிறது! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  4. வண்ணம் எண்ணத்தை ஈர்ப்பதைவிட கருப்பு வெள்ளையே வெள்ளைக் கருப்பில் பதிவாய் நிற்கும்! கல்லில் செதுக்கிய சாசனமாகும்! நீர்மேல் எழுத்தாய் மறைந்துவிடாது! நித்தியம் அதுவே! நிரந்தரம் அதுவே! வாழிய முயற்சி! வளர்க மேலும்!

    பதிலளிநீக்கு
  5. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  6. உண்மை தான் ஐயா...

    பொக்கிசங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்...

    பதிலளிநீக்கு
  7. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதை சேஷாத்ரி..... கருப்பு வெள்ளைப் படங்களைப் போலவே!

    பதிலளிநீக்கு
  10. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  11. //கணினி யுகத்தினில்
    காத்திட வழிஉண்டு!
    ஏற்றிடுவோம் கணினியிலே
    எதிர்காலம் அறிந்திடவே!//

    சரியாகச் சொன்னீர்கள்...

    பதிலளிநீக்கு
  12. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  13. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  14. கணினி யுகத்தினில்
    காத்திட வழிஉண்டு!
    ஏற்றிடுவோம் கணினியிலே
    எதிர்காலம் அறிந்திடவே!//
    உண்மை ! நன்றாக சொன்னீர்கள் அப்படித்தான் செய்து கொண்டு இருக்கிறோம் நாங்கள்.

    பதிலளிநீக்கு
  15. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு