புதன், 14 மே, 2014

உன்னிலும் நான்மேல்தான் -காரஞ்சன்(சேஷ்)

                                   
                                              உன்னிலும் நான்மேல்தான்!
மண்டபத்தைக் கட்டிவைத்த
மன்னவன் யாரோ?
என்நிலையில் இருப்பவர்க்கு
இதுதான் வீடோ?
                      
இறுகிய கருங்கல்லும்
இடம்விடுதே செடிவளர!
இடம்பிடித்தேன் இவைகளுடன்
நானுமிங்கு நடைதளர!
                                 
எலிகளும் கொசுக்களுமே
என்னுடன் வாசம்!             
இரக்கப்படும் தென்றல்வந்து
என்மேல் வீசும்!
                      
வளர்ந்து தேய்ந்தவர்க்கு
வாழ்வில் துயருண்டு!
தேய்ந்து வளர்ந்தவர்க்கோர்
திருப்தியும் அதிலுண்டு!
                      
இரண்டு நிலைகளுக்கும்
என்வாழ்வில் இடமில்லை!
இருப்பதுபோதுமென்றால்
எந்நாளும் துயரில்லை!

வெளிச்சமிட்டு எந்நிலையை
வெளிக்காட்டும் வெண்ணிலவே!
உன்னைவிட நான்மேல்தான்
உடுத்தியுள்ளேன் கந்தையினை! 
-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

24 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    பெற்ற பிள்ளைகள் பெற்றவங்களை மறப்பதால்..இந்த நிலைதான் மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

      நீக்கு
  2. வெளிச்சமிட்டு எந்நிலையை
    வெளிக்காட்டும் வெண்ணிலவே!
    வேதனைப்படுமோ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  3. //இருப்பதுபோதுமென்றால் எந்நாளும் துயரில்லை!
    வெளிச்சமிட்டு எந்நிலையை வெளிக்காட்டும் வெண்ணிலவே!//

    உன்னைவிட நான்மேல்தான் உடுத்தியுள்ளேன் கந்தையினை! //

    சிந்திக்கச்செய்யும் சிறப்பான வரிகள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
    2. உறவிருந்தும் உதவுவார் யாருண்டு . இந்நிலை புரிந்தார்க்கே நிலமை. புரியும்

      நீக்கு
    3. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  4. //வெளிச்சமிட்டு எந்நிலையை
    வெளிக்காட்டும் வெண்ணிலவே!
    உன்னைவிட நான்மேல்தான்
    உடுத்தியுள்ளேன் கந்தையினை! //
    வேதனைமிகு வரிகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  5. ஒரு முதியவனின் வேதனையை வெளிப்படுத்தும் யதார்த்தமான வலிமிகுந்த வரிகள்! உன்னிலும் நான் மேல்தான், உடுத்தியுள்ளேன் கந்தையினை என நிலவைப் பார்த்து உரைக்கும் இடம் புதுமை! நல்ல ஒரு கற்பனை! மொத்தத்தில் அருமையான கவிதை! வளர்க!

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா14 மே, 2014 அன்று PM 9:29

    படமும் வரிகளும் ஒன்றை ஒன்று விஞ்சி நின்று வலியை உணர்த்துகின்றன! நன்றி!-தக்‌ஷி

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  8. வெளிச்சமிட்டு எந்நிலையை
    வெளிக்காட்டும் வெண்ணிலவே!
    உன்னைவிட நான்மேல்தான்
    உடுத்தியுள்ளேன் கந்தையினை! wow அருமை அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி !

      நீக்கு
  9. no words to praise you may god be with you

    anthuvan cuddalore

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  10. திக்கற்றோருக்கு தெய்வமே துணை என்பார்கள். ஏழையின் பார்வையில் வெண்ணிலாவை எடுத்துரைத்த இயல்பான கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  12. த.ம ஐந்து..
    ஜோரான கவிதை அதற்கு ஏற்ப படம் எங்கே கிடைத்திருக்கும் என்று இன்னும் வியப்பாக இருக்கிறது ...
    வரிகள் அத்துணையும் செம்மை..
    வாழ்த்துக்கள்
    http://www.malartharu.org/2014/05/100results-sslc.html

    பதிலளிநீக்கு
  13. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு