வியாழன், 9 பிப்ரவரி, 2012

கா! ...கா!....கா!- காரஞ்சன்(சேஷ்)

கா!.....கா!..... கா!...

                                                வெட்டிவைத்த பள்ளத்தில்
                                                வீழ்ந்த மழைநீரை
                                                எடுத்துப் பருகுவதில்
                                                எங்களுக்குள் சண்டையில்லை!
                                                கா!...கா!..கா!

                                               அணைநீரைப் பகிர்வதற்கு
                                               ஆங்காங்கே சண்டையிடும்
                                                உங்களுடன் எங்கள்பேச்சு
                                                கா!........கா!.......கா!

                                                         -காரஞ்சன்(சேஷ்)

17 கருத்துகள்:

  1. அருமை ! ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு காக்கை தான் ! நன்றி நண்பரே !

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்று!

    கார்க்கி

    பதிலளிநீக்கு
  3. காக்கையாகக் கத்தினாலும்
    கரடியாகக் கத்தினாலும்
    மனிதர்களுக்குள்
    ஒற்றுமை
    ஏற்பட்டு விடுமா என்ன?

    நல்ல சிந்தனை! ;)

    பதிலளிநீக்கு
  4. //அணைநீரைப் பகிர்வதற்கு
    ஆங்காங்கே சண்டையிடும்
    உங்களுடன் எங்கள்பேச்சு
    கா!........கா!.......கா!//

    உண்மையான வரிகள்...

    பதிலளிநீக்கு
  5. நல்ல வரிகள்... ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலைதான்... :(

    பதிலளிநீக்கு
  6. பொட்டில் அறையும் நிதர்சன வரிகள் ..
    உணர்சிக்கவிக்கு என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. அருமையான பாடல்கள் கா,கா, கா பாடல்.

    பதிலளிநீக்கு
  8. அணைநீரைப் பகிர்வதற்கு
    ஆங்காங்கே சண்டையிடும்

    உங்களுடன் எங்கள்பேச்சு
    கா!........கா!.......கா!

    காக்காவும் காய் விட்டுவிட்டதே !

    பதிலளிநீக்கு