புதன், 19 செப்டம்பர், 2012

பிறை நுதல்!, அரை நிலவு! -காரஞ்சன் (சேஷ்)

                                                          
                                                                   பிறை நுதல்!


ஒட்டும் பொட்டு
உனக்கும் பிடித்ததோ?
பிறைநிலவே!
ஒட்டியிருக்கிறாய்
ஒரு நட்சத்திரத்தை!

-காரஞ்சன்(சேஷ்)



                                                            அரை நிலவு!



அன்று உன்னுள்
அடியெடுத்து வைத்த
ஆம்ஸ்ட்ராங்கின்-
மறைவுக்கு அஞ்சலியோ? -நீ
அரை நிலவானாய்?

                   -காரஞ்சன்(சேஷ்)

படங்கள்  உதவி: கூகிளுக்கு நன்றி!

21 கருத்துகள்:

  1. வித்தியாசமான கற்பனை..நன்று!

    பதிலளிநீக்கு
  2. அழகான கற்பனையில் அற்புதமான இரு கவிதைகள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. தங்களின் வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளிக்கின்றது! நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  5. நிலவும் விண்மீனும் காண்பதற்கு அழகு
    உம் கவிதை சுவைப்பதற்கு அழகு
    அழகு என்றாலே அதனுடன்
    ஆபத்தும் தொடர்ந்து வரும்
    நிலவு என்னும் சந்திரனின்
    அருகில் இருக்கும்
    அந்த விண்மீன்
    வேறு யாரும் இல்லை
    அவன் மற்ற மனைவிகளை விட
    அதிகமாக அன்பு பாராட்டப்பட்ட
    ரோஹிணிதான்.
    அதனால்தான் அவன் மாமனார்
    தட்ச பிரஜாபதியின் சாபத்தால்
    அவனுக்கு ரோகம் பிடித்து
    தேய்ந்து போக தொடங்கினான்
    பிறகு சிவபெருமான் காலில்
    விழுந்து வணங்கினான்
    காலில் விழுந்துவணங்கியவனை
    தன் தலையில் தூக்கி வைத்து
    கொண்டாடியதால் சந்திர சேகரன்
    என்ற பெயரும் பெற்றார்.

    பதிலளிநீக்கு
  6. கூடுதல் தகவல்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  7. வித்தியாசமான அசத்தலான அருமையான
    மிகச் சரியாகச் சொன்னால் யதர்த்தமான சிந்தனை
    சொல்லிபோனவிதமும் மிக மிக அழகு
    மனம் தொட்டப் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. தங்களின் வருகையும்,இரசித்துக் கூறிய கருத்துரையும் ஊக்கமளிக்கிறது! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  9. நிலவுக் கவிதைகள் இரண்டும் அருமை! முதல் கவிதை சிந்தனை சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. வித்தியாசமான சிந்தனை வரிகள்... அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  11. தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  12. இரு கவிதைகளுமே ரசிக்கவைத்தன, ஒன்று மகிழ்வாய் மற்றொன்று நெகிழ்வாய். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  13. தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் உளமார்ந்த நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  14. சிறப்பான சிந்தனை.... நட்சத்திரத்தையே பொட்டாய் ஒட்டிக்கொண்ட நிலவு.... :))

    பதிலளிநீக்கு