வளைத்துப்
போட்டதனால்
சுள்ளிக்கட்டும்
உனக்கு
சுமையாகிப் போனதோ?
வளைந்த
கோலொன்று
வழித்துணை
யாகுதிங்கே!
களையிழந்த
நிலப்பரப்பில்
களைப்பின்
மிகுதியில்
தோள்சாய
யாருமின்றி
கோல்சார்ந்து
நிற்கின்றாய்!
கடந்த
காலங்கள் உந்தன்
கண்முன்
நின்றனவோ?
நடந்ததெல்லாம்
போதும் -இனி
நடப்பதை
யாரறிவார்?
கனியாதோ
காலமென
கவலையுறும்
இவளிடத்தில்
இனியேனும்
நீ
இரக்கம்கொள்
இறைவா!
-காரஞ்சன்(சேஷ்)பட உதவி:கூகிளுக்கு நன்றி!
உருக வைக்கும் வேதனை வரிகள்...
பதிலளிநீக்குநன்றி ஐயா!
பதிலளிநீக்குபடமும் அதற்கான விளக்கப் பதிவான
பதிலளிநீக்குகவிதையும் மனம் தொட்டது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ஐயா!
பதிலளிநீக்குஇதயத்தை தொட்ட வரிகள்
பதிலளிநீக்குஇந்த சின்ன விஷயதிர்க்கெல்லாம்
இறைவன் வரமாட்டான்.
இவள் நிலையை காணும்
மனதில் ஈரமுள்ள மனிதர்கள்
இவள் சுமையை
குறைக்கலாம் அல்லது நீக்கலாம்.
பாசமுள்ள பார்வைகளிலெல்லாம் கடவுள் வாழ்கிறான்!
நீக்குஉண்மைதான்!
தங்களின் வருகைக்கு நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)
கனியாதோ காலமென
பதிலளிநீக்குகவலையுறும் இவளிடத்தில்
இனியேனும் நீ
இரக்கம்கொள் மனிதா...
நமக்கு நாமே உதவிக்கொண்டால் தான் நல்லது என்பது என் கருத்தும்.
தங்களின் கருத்துரைக்கு நன்றி!
பதிலளிநீக்குfantastic sesha i love you
பதிலளிநீக்குanthuvan
பதிலளிநீக்குfantastic!
-Shanmugasundaram Ellappan
Thank You!
நீக்குஅருமை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
தங்களின் வருகைக்கு நன்றி ஐயா!
பதிலளிநீக்கு-காரஞ்சன்(சேஷ்)
கண்கள் ஈரமாக்கும் வரிகள் ...
பதிலளிநீக்குஇரக்கம் கொள்வானா அந்த இறைவன்...?
வாழ்த்துக்கள் நண்பா...
தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குஇறாய்வன் இரக்கம் கொளவது எல்லாம் அப்புறம்.முதலில் மனிதர்கள்.
பதிலளிநீக்குதங்களின் வருகை மகிழ்வளித்தது நண்பரே! நன்றி!
பதிலளிநீக்கு-காரஞ்சன்(சேஷ்)
//"கனியாதோ காலமென
பதிலளிநீக்குகவலையுறும் இவளிடத்தில்
இனியேனும் நீ
இரக்கம்கொள் இறைவா!"//
அனைவரையும் உருக வைக்கும் வரிகள்...பகிர்வுக்கு நன்றி....
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி!
பதிலளிநீக்கு-காரஞ்சன்(சேஷ்)
கண்களைப் பனிக்கச் செய்த வரிகள். அம்முதியவளின் நிலையில் அவள் தேவை என்ன என்பதை அந்த ஆண்டவன் அறியாமலா இருப்பான்?
பதிலளிநீக்குநன்றி! நன்றி!
பதிலளிநீக்குஅதே படம்.... கவிதை தமிழில். உங்கள் தமிழில்... நல்ல கவிதை நணபரே.... நான் இந்தப் படத்தினை சுட்டுக்கொண்டேன்... :)))
பதிலளிநீக்குநன்றி நண்பரே! வலையில் கிட்டியதுதான் இந்தப் படம்! பார்த்ததும் சிந்தையைக் கவர்ந்தது! நன்றி!
பதிலளிநீக்குகனியாதோ காலமென
பதிலளிநீக்குகவலையுறும் இவளிடத்தில்
இனியேனும் நீ
இரக்கம்கொள் இறைவா!
இறைவனிடம் இறைஞ்சுவோம் ..
அவன் இல்லை என சொல்வதில்லையே !