வெள்ளி, 21 செப்டம்பர், 2012

கழிவிரக்கம்!- காரஞ்சன்(சேஷ்)


                                                                 
                                                                          கழிவிரக்கம்!
வாழ்க்கைச்சுமை உனை
வளைத்துப் போட்டதனால்
சுள்ளிக்கட்டும் உனக்கு
சுமையாகிப் போனதோ?

வளைந்த கோலொன்று
வழித்துணை யாகுதிங்கே!

களையிழந்த நிலப்பரப்பில்
களைப்பின் மிகுதியில்
தோள்சாய யாருமின்றி
கோல்சார்ந்து நிற்கின்றாய்!

கடந்த காலங்கள் உந்தன்
கண்முன் நின்றனவோ?
நடந்ததெல்லாம் போதும் -இனி
நடப்பதை யாரறிவார்?

கனியாதோ காலமென
கவலையுறும் இவளிடத்தில்
இனியேனும் நீ 
இரக்கம்கொள் இறைவா!
                                               -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:கூகிளுக்கு நன்றி!

24 கருத்துகள்:

  1. படமும் அதற்கான விளக்கப் பதிவான
    கவிதையும் மனம் தொட்டது
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இதயத்தை தொட்ட வரிகள்
    இந்த சின்ன விஷயதிர்க்கெல்லாம்
    இறைவன் வரமாட்டான்.
    இவள் நிலையை காணும்
    மனதில் ஈரமுள்ள மனிதர்கள்
    இவள் சுமையை
    குறைக்கலாம் அல்லது நீக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாசமுள்ள பார்வைகளிலெல்லாம் கடவுள் வாழ்கிறான்!
      உண்மைதான்!
      தங்களின் வருகைக்கு நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  3. கனியாதோ காலமென
    கவலையுறும் இவளிடத்தில்
    இனியேனும் நீ
    இரக்கம்கொள் மனிதா...

    நமக்கு நாமே உதவிக்கொண்டால் தான் நல்லது என்பது என் கருத்தும்.

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வருகைக்கு நன்றி ஐயா!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  5. கண்கள் ஈரமாக்கும் வரிகள் ...
    இரக்கம் கொள்வானா அந்த இறைவன்...?
    வாழ்த்துக்கள் நண்பா...

    பதிலளிநீக்கு
  6. இறாய்வன் இரக்கம் கொளவது எல்லாம் அப்புறம்.முதலில் மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
  7. தங்களின் வருகை மகிழ்வளித்தது நண்பரே! நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  8. //"கனியாதோ காலமென
    கவலையுறும் இவளிடத்தில்
    இனியேனும் நீ
    இரக்கம்கொள் இறைவா!"//

    அனைவரையும் உருக வைக்கும் வரிகள்...பகிர்வுக்கு நன்றி....

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  9. தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  10. கண்களைப் பனிக்கச் செய்த வரிகள். அம்முதியவளின் நிலையில் அவள் தேவை என்ன என்பதை அந்த ஆண்டவன் அறியாமலா இருப்பான்?

    பதிலளிநீக்கு
  11. அதே படம்.... கவிதை தமிழில். உங்கள் தமிழில்... நல்ல கவிதை நணபரே.... நான் இந்தப் படத்தினை சுட்டுக்கொண்டேன்... :)))

    பதிலளிநீக்கு
  12. நன்றி நண்பரே! வலையில் கிட்டியதுதான் இந்தப் படம்! பார்த்ததும் சிந்தையைக் கவர்ந்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. கனியாதோ காலமென
    கவலையுறும் இவளிடத்தில்
    இனியேனும் நீ
    இரக்கம்கொள் இறைவா!

    இறைவனிடம் இறைஞ்சுவோம் ..
    அவன் இல்லை என சொல்வதில்லையே !

    பதிலளிநீக்கு