கோடை வெயிலுக்கு
குளிர்நிழல் அளிக்குமென
வேப்ப மரமொன்றை
வீட்டோரம் வளர்த்துவந்தார்!
உயர்ந்த மரத்தின்
ஒருகிளை பால்கனியில்
படர்ந்ததைக் கண்டு
பரவசம் மிகக் கொண்டார்!
வளர்ந்த மரம்நாடி
வந்தமர்ந்த காகமொன்று
துணையுடன் சேர்ந்து
துவங்கியது கூடமைக்க!
காலமாற்றம்
காக்கைக்கும் உண்டன்றோ!
கட்டுக்கம்பிகளும்
காக்கையின் கூட்டிலுண்டு!
ஆக்ரமிப் போரிடம்
அகப்பட்ட நிலம்போல
வளர்ந்(த்)த மரத்தைத்-தன்
வசமாக்கின காக்கைகள்!
கரையும் காக்கைக்கு
கரையாத மனம்போலும்!
பால்கனிப்பக்கம் யாரைப்
பார்த்தாலும் கொத்தவரும்!
வளர்த்த மரத்தருகில்
வந்து நிற்க முடியாமல்
வாடிநிற்கும் முதியவரின்
வாயுரைத்த மொழிகேளீர்!
வரம்வாங்கி வந்தால்தான்
வளர்த்ததெல்லாம் பயன்தருமோ?
-காரஞ்சன்(சேஷ்)
//வரம்வாங்கி வந்தால்தான்
பதிலளிநீக்குவளர்த்ததெல்லாம் பயன்தருமோ?//
அனுபவித்துத்தான் சொல்லியுள்ளார் அந்த முதியவர்.
நல்ல கவிதைக்கு பாராட்டுக்கள்.
தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளிக்கிறது!நன்றி ஐயா!
பதிலளிநீக்குநல்லதொரு கேள்வி சார்... நன்றி... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களின் கருத்துரை மகிழ்வளிக்கிறது.நன்றி!
பதிலளிநீக்குஐயா திரு.வைகோ அவர்கள் சொன்னது போல் அனுபவித்து கூறியுள்ளார் அந்த முதியவர்!
பதிலளிநீக்குநல்ல கவிதை நண்பரே வாழ்த்துக்கள்.!
கருத்துரைக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்கு-காரஞ்சன்(சேஷ்)
imagination is very gud and that too the beautiful lines god bless you more
பதிலளிநீக்குanthuvan cuddalore
நன்றி!
பதிலளிநீக்குநல்லதொரு கவிதை! இன்பத்தை அனுபவிக்கவும் ஒரு வரம் தேவைதான்! நன்றி!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!
நீக்குஅனுபவிக்கவும் கொடுப்பினை வேண்டும்...
பதிலளிநீக்குநல்ல கவிதை. பாராட்டுகள் சேஷாத்ரி ஜி.
வருகைக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குவரம்வாங்கி வந்தால்தான்
பதிலளிநீக்குவளர்த்ததெல்லாம் பயன்தருமோ?
கவனத்தில் கொள்ளவேண்டிய அனுபவ வரிகள்..
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
பதிலளிநீக்கு-காரஞ்சன்(சேஷ்)