செவ்வாய், 4 செப்டம்பர், 2012

ஆசிரியர்தின வாழ்த்து- என் மகளின் கவிதைகள்





விண்ணளக்கப்  பாதையிட்டு
கண்களுக்குள்  கனவைத்தொட்டு
வண்ணங்கள் குழைத்து வாழ்வில் ஒளியூட்ட
பூமிக்குள் பிறந்த நிலவும் நீ!

என்பாதைகளில் பூக்கள்பரப்பி
என்மனமுழுதும் நம்பிக்கைநிரப்பி
நீங்காது நெஞ்சில் நிற்கிறாய்
என் ஆசானாய் நிலவும் நீ!

வாழ்விற்கு வித்திட்ட விதையும் நீ!
விதைமேல் தூவும் மழையும் நீ!
மழையால் வளரும் மரமும் நீ!

வாழ்விலும் தாழ்விலும்
தாங்கிநிற்கும் தாயும் நீ!
தாயினும் மேலாகி தன்னைக்
கொடுத்துத் துணைசெயும் தெய்வம் நீ!

தெய்வங்களுள் உயர்ந்து
நிற்கும் என் ஆசான் நீ!

சே.பவித்ரா.

                                     ஆங்கிலக் கவிதை

when I lay weak and lame
You lifted me and called my name
Into mylife a Rainbow came
And gave me all the light and fame!

Whatever I do you never blame
And in my heart, you lit a flame
You made me win all my games
And without you I'd never be the same

My dear teacher calm and kind
A person like you is hard to find
And all I want is to wish you and say
"A VERY HAPPY TEACHERS DAY"

-S.PAVITHRA

22 கருத்துகள்:

  1. ஆசிரியர் தின அன்பு வாழ்த்துகள்

    தங்கள் மகளின் கவிதைகள் அழகு.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அருமை பவித்ரா! தொடந்து எழுது! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  3. நன்றி தாத்தா!
    சே.பவித்ரா

    பதிலளிநீக்கு
  4. தங்களின் மகளுக்கு வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு

  5. தெய்வங்களுள் உயர்ந்து
    நிற்கும் என் ஆசான் நீ!

    இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  6. மகளின் மனவெளிப்பாடாய் அமைந்த அழகு ஆங்கிலக் கவிதையும், அதை அற்புதமாய் தமிழில் படைத்த தங்கள் கவிதையும் ஒன்றையொன்று படைப்பில் விஞ்சி நிற்கின்றன. பவித்ராவின் பாராட்டுப் பெற்ற ஆசிரியர் பாக்கியம் பெற்றவர். தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. தங்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது! இரு கவிதைகளுமே என் மகளின் படைப்புகள்தான்! தங்களின் பாராட்டுகளை அவளுக்குத் தெரிவித்துவிட்டேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான பகிர்வு! கவிதைகள் அருமை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    பழஞ்சோறு! அழகான கிழவி!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான கவிதை பவித்ரா... வாழ்த்துகள்.

    படித்த ஆசிரியர் நிச்சயம் உவகை கொண்டிருப்பார்....

    பகிர்ந்ததற்கு நன்றி சேஷாத்ரி ஜி!

    பதிலளிநீக்கு
  10. நன்று....
    நம்பிக்கை தரும் வரிகள் ...
    தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  11. ஆங்கிலக் கவிதை மிக மிக அருமை...!!! வார்த்தைப் பிரவாகம் சில இடங்களில் வில்லியம் வோர்ட்ஸ் வொர்த்தை ஞாபகப் படுத்துகிறது...!!மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்...!!!

    பதிலளிநீக்கு
  12. நன்றி uncle! நன்றி!
    பவித்ரா

    பதிலளிநீக்கு
  13. very good lines and words pavithra words in english is heart blowing
    may god bless both of you

    anthuvan cuddalore

    பதிலளிநீக்கு
  14. தமிழின் சொல்வளம் கண்டு அது தாங்கள் எழுதிய கவிதையென்றே நினைத்துவிட்டேன். மன்னிக்கவும். அழகுத்தமிழில் ஆசிரியருக்கு வாழ்த்துப்பாடல் எழுதிய தங்கள் மகளுக்கு என் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கள் அவளுக்கு மேலும் ஊக்கமளிப்பதாய் அமைந்துள்ளன! தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

      நீக்கு