இமைகளே!
விழிகளின் மொழிகள்
வெளிவரும் வழிகளே!
கடைக்கண் பார்வைக்கு
காத்திருக்கும்
தருணத்தில்
ஏனோமூடிக் கொள்(ல்)கின்றாய்?
பிரிவெனும் துயருடன்
இரவுகள் கழிகையில்
ஏனோ மூடமறுக்கின்றாய்!
கண்களின் காதலியே!
உன்வழி ஒருத்தி
உட்புகும் முயற்சிக்கு
ஒத்துழையாமை இயக்கமோ?
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வரிகள் மிகவும் அருமை (படமும்)...
பதிலளிநீக்குதங்களின் கருத்துரைக்கு நன்றி!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
ஒத்துழையாமை இயக்கம் அருமையாக நடந்ததா ?
பதிலளிநீக்கும்ம்.. தங்களின் வருகைக்கு நன்றி!
நீக்குஅருமையான வரிகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி!
பதிலளிநீக்கு//பிரிவெனும் துயருடன்
பதிலளிநீக்குஇரவுகள் கழிகையில்
ஏனோ மூடமறுக்கின்றாய்!//
அருமை.... பிரிதலின் வலியில் தூக்கம் வருவதில்லையே....
உண்மைதான் நண்பரே! வருகைக்கு நன்றி!
நீக்குgud words love to read it too hats up to u
பதிலளிநீக்குanthuvan cuddalore
நன்றி நண்பரே!
பதிலளிநீக்குவிழிகளின் மொழிகள் வெளிவரும் வழிகள்! சிறப்பான வரிகள்! அருமையான கவிதை!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
பிள்ளையார் திருத்தினார்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html
நண்பருக்கு நன்றி!
நீக்கு//கடைக்கண் பார்வைக்கு
பதிலளிநீக்குகாத்திருக்கும் தருணத்தில்
ஏனோமூடிக் கொள்(ல்)கின்றாய்?//
:) :) :)
நன்றி நண்பரே!
பதிலளிநீக்குவித்தியாசமான அருமையான
பதிலளிநீக்குரசிக்கும்படையான அழகான சிந்தனை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ஐயா!
பதிலளிநீக்கு-காரஞ்சன்(சேஷ்)
கண்களின் காதலி, அருமையான விளிப்பு. கண்ணைக் காக்கும் இமைகளைக் கருத்திற்கொண்டு பாடிய கவிதை அழகு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
நீக்குகாதல் என்றாலே பொறாமையும் தவிர்க்க முடியாது...!இமைகள் மட்டும் என்ன விதிவிலக்கா...?நல்ல கற்பனை...!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குGopalakrishnan Vai. said
கண் இமைக்காமல் படித்தேன். நல்ல கவிதை. பாராட்டுக்கள்.
விழிகளின் மொழிகள்
பதிலளிநீக்குவெளிவரும் வழிகளே!
இமைக்கும் அழகிய கண்கள் படமும் கருத்தும் அருமை !