திங்கள், 3 டிசம்பர், 2012

எது ஊனம்? -காரஞ்சன்(சேஷ்)

                                                             
                                                                எது ஊனம்?
03-12-2012

உலகமெங்கும் அனுசரிக்கும்
ஊனமுற்றோர் தினம் இன்று!

அவர்படு துயரம்
அடுத்தவர் உணர்ந்து
அரவணைத்திடவே
அமைந்த தினமிது!

உலகளவில்
 ஊனமுற்றோர்
மொத்த மக்கள் தொகையில்
பத்து சதவீதமாம்!

ஆனால் உண்மையில்...

கண்ணிருந்தும் கல்லாதோர்
கண்ணிழந்தோரே!

செல்வம் நிறைந்திருந்தும்
எள்ளளவும் ஈயாதார்
கையிழந்தோரே!

உடல் ஊனம்
 ஒரு பொருட்டல்ல என
உழைப்பவர் மத்தியில்
உடல் பலமிருந்தும்
உழைக்க மறுத்து
முடங்கிக் கிடப்பவர்
முடவரன்றோ!

அடுத்தவர் படுதுயர்-செவி
மடுத்திட மறுப்பவர்
செவிடரன்றோ?

நாடி வந்தோர்க்கு
ஓடி உதவாக்
கால்களும் ஊனமன்றோ?

வாய்மை உரைக்காத
வாயும் ஊமையன்றோ?

பிறர் உயர்வைப்
பொறுக்காத பலரின்
மனமும் ஊனமன்றோ?

இத்தனை ஊனம்
நம்மிடம் இருப்பதை
இனியேனும் உணர்ந்து
உதவிக்கரம் நீட்டுவோம்
ஊனமுற்றோர்க்கு!

முடங்கிக் கிடக்கும்
முக்கியத் திட்டங்கள்
விரைந்து செயல்பட
வேண்டியன செய்வோம்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

 

28 கருத்துகள்:


  1. இத்தனை ஊனம்
    நம்மிடம் இருப்பதை
    இனியேனும் உணர்ந்து
    உதவிக்கரம் நீட்டுவோம்
    ஊனமுற்றோர்க்கு!

    ஆமா ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்மா!

    பதிலளிநீக்கு
  3. பொட்டில் அடித்தார் போல இருக்கு சார் உங்கள் கவிதை . இனியாவது திருந்தட்டும் இந்த சமூகம் .
    முகுந்தன்

    பதிலளிநீக்கு
  4. அர்த்தமுள்ள வரிகள்...இனியேனும் திருந்துவோம்.

    பதிலளிநீக்கு
  5. விரைந்து செயல்பட
    வேண்டியன செய்வோம்!

    இதை விட வேறு என்ன சொல்லி விடப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான கவிதை. ஒவ்வொருவரிடமும் பல ஊனங்கள் இருக்க அவர்களை ஊனமுள்ளவர் என்று சொல்லி சிறுமைப் படுத்துவதேனோ....

    பதிலளிநீக்கு
  7. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  8. முடங்கிக் கிடக்கும்
    முக்கியத் திட்டங்கள்
    விரைந்து செயல்பட
    வேண்டியன செய்வோம்!

    சிறப்புதினத்திற்கு சிறப்பான பகிர்வுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இனியேனும் உணர்ந்து
      உதவிக்கரம் நீட்டுவோம்
      ஊனமுற்றோர்க்கு!//

      அனைத்து வரிகளும் அருமையோ அருமை.
      பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

      நீக்கு
  9. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  10. முடங்கிக் கிடக்கும்
    முக்கியத் திட்டங்கள்
    விரைந்து செயல்பட
    வேண்டியன செய்வோம்!//

    ஆம், உண்மைதான்! இனியாவது விரைந்து செயல்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் !

    தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  12. மன ஊனம் தான் உண்மையான ஊனம் என சுட்டிக்காட்டிய கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  13. இத்தனை ஊனம்
    நம்மிடம் இருப்பதை
    இனியேனும் உணர்ந்து
    உதவிக்கரம் நீட்டுவோம்
    ஊனமுற்றோர்க்கு!//

    உண்மையான வரிகள்...

    பதிலளிநீக்கு
  14. அன்பின் காரஞ்சன் - வலைச்சரம் மூலமாக வந்தேன் - அருமையான் சிந்தனையில் விளைந்த கவிதை - மாற்றுத் திறனாளிகளுக்கு நம்மால் இயன்ற வரை உதவ வேண்டும். படிப்பவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் உதவத் துவங்கி இருப்பார்கள். நல்வாழ்த்துகள் காரஞ்சன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு