திங்கள், 8 ஜூலை, 2013

என்றும் பசுமையாய்!

                                                     
                                                           என்றும் பசுமையாய்!

வளரும் பருவத்தில்
வளர்த்தாய் எங்களை!

வாங்கிய கடனை
வட்டி வளர்த்தது!

கரும்பும் நெல்லும்
கருகும் நிலையில்

ஆழ்துளைக் கிணறுகள்
அமைத்திட முயன்றோம்

நீராய்க் கரைந்தது பணம்
நீர் கிடைக்காமலே!

கடனை அடைக்க
கைமாறியது நிலம்!

கண்ணீர் பெரு(க்)கும் நினைவுகளில்
என்றும் பசுமையாய் என்னுள் நீ !

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!
 

32 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இலவச மின்சாரம் இல்லாத காலமது! 79-80 நிகழ்வு இது! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

      நீக்கு
    2. 79-80களில் நிகழ்வு இது! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

      நீக்கு
  2. அர்த்தம் பொதிந்த கவிதை. வேதனைகள் + வலிகள் வரிகளிலேயே தெரிகின்றன.

    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. பசுமை என்றும்
    பூமி தாயின் மடியில்
    பத்திரமாக உள்ளது

    மனிதர்களின் சுயநலம்தான்
    அதை முளைத்து வளரவிடாமல்
    செய்கிறது

    மனிதர்களை விட சக்தி வாய்ந்தது
    இயற்கை
    அதன் முன் மனிதனின் செயற்கைகள்
    அனைத்தும் இறக்கைகள் இல்லா
    பறவைகள் போல் அழிந்தொழியும்.

    மீண்டும் பசுமை மலரும்.

    பதிலளிநீக்கு
  4. ஆழம் பொருந்திய அற்புத கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. கண்ணீர் பெரு(க்)கும் நினைவுகளில்
    என்றும் பசுமையாய் என்னுள் நீ !

    பசுமை பூமியின்
    பசுமை நிறைந்த நினைவுகள்..!

    பதிலளிநீக்கு
  6. அர்த்தம் பொதிந்த கவிதை.....

    மனதில் வருத்தம் உண்டாக்கியது!

    பதிலளிநீக்கு
  7. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  8. எனது உள்ளகுமுரலை பிரதிபளிக்கிறது சார் உங்கள் கவிதை.

    பதிலளிநீக்கு
  9. தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன் நண்பரே! நன்றி!

    பதிலளிநீக்கு

  10. நம் விவசாயியின் நிலைமையை
    இதைவிட சிறப்பாகச் சொல்வது கடினமே
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு