புதன், 24 ஜூலை, 2013

கிளை தழைக்க! - காரஞ்சன்(சேஷ்)


                                                        கிளை தழைக்க!

வெட்டி  முறித்தாயோ?
வியர்வை பெருகியதோ?
பாழும் மனிதா!
வீழும் நிலையிலும்
நிழல் கொடுக்கும் மரமுனக்கு
போதி மரமாகி
புத்தி புகட்டாதோ?
அழித்திடும் இழிசெயலை
அடியோடு வெட்டியெறி!
தழைத்த மரம் பெருகிடத்தான்
தரணியில் நம் கிளை தழைக்கும்!

                                              -காரஞ்சன்(சேஷ்)

மின்னஞ்சலில் படம் அனுப்பிய நண்பருக்கு நன்றி!

28 கருத்துகள்:

 1. //அழித்திடும் இழிசெயலை
  அடியோடு வெட்டியெறி!//

  ;)))))

  அருமையான விழிப்புணர்வுக் க்விதை.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. சாகனும்னு முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேக்கமாட்டேன் - மரம் வெட்டிகள்.

  பதிலளிநீக்கு
 3. நிற்கிற மட்டும் அல்ல
  வீழுகிற நிலையிலும் மரம்
  போதிமரம்தான்
  பலனின்றி மொட்டையாக நின்றாலும்
  நிழல் கொடுக்கும்தானே
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. மரங்களை நேசிப்போம்.....

  நல்ல கவிதை நண்பரே....

  பதிலளிநீக்கு
 5. இன்றைக்கு சிந்திக்க வேண்டிய அருமையான கருத்துடன் கூடிய கவிதை... வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 6. வீழும் நிலையிலும்
  நிழல் கொடுக்கும் மரமுனக்கு
  போதி மரமாகி
  புத்தி புகட்டாதோ?

  புத்தி புகலும் புது மொழிகள் ..
  அருமை..பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 7. சாட்டை அடி சார் . மரம் வளர்ப்போம் தரணியை காப்போம்

  பதிலளிநீக்கு
 8. //தழைத்த மரம் பெருகிடத்தான்
  தரணியில் நம் கிளை தழைக்கும்!//

  அர்த்தமுள்ள வரிகள்.

  பதிலளிநீக்கு
 9. நன்று...!
  மரக் கிளைகள் தழைத்தால்
  நம் தலைகள் பிழைக்கும்...!!!

  பதிலளிநீக்கு
 10. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 11. வெட்டியெறியவேண்டிய குணங்கள் நம்மிடையே எத்தனையோ இருக்க, வளர்க்க வேண்டிய மரங்களை வெட்டி நமக்கு நாமே குழிபறித்துக்கொள்ளும் அறிவீனம் என்றுதான் அழியுமோ நம்மிடம்! ஆதங்கம் தெறிக்கும் கவிதை. உணர்ந்து திருந்தினால் அனைவருக்குமே நன்று. பாராட்டுகள் சேஷாத்ரி.

  பதிலளிநீக்கு
 12. நிழல் கொடுக்கும் மரமுனக்கு
  போதி மரமாகி
  புத்தி புகட்டாதோ?
  அழித்திடும் இழிசெயலை
  அடியோடு வெட்டியெறி!//
  மரங்களின் பயன் கருதி மரத்தை வெட்டுவதை விடுத்து மரம் வளர்த்தல் நல்லது.
  நல்ல விழிப்புணர்வு கவிதை.

  பதிலளிநீக்கு