சனி, 27 ஜூலை, 2013

சாரம்!- காரஞ்சன்(சேஷ்)



 வாழ்வின் சாரம்!




காலச் சக்கரத்தில்
கட்டுண்ட நீ
வாழ்க்கைப் பயணத்தில்
வண்டிக்குள் கால்நடையாய்!

விரித்த கரங்களின்
அரவணைப்பில்
சாரமாய் நின்ற
சவுக்கு மரங்கள்!

உயர்ந்த கட்டிடத்திற்கு
சாரமாய் நின்ற
சவுக்குக் கம்பங்கள்
அக(ற்ற)ப்படுகின்றன
அடுத்தொன்றை உயர்த்திட!
அல்லது
அடுப்பினில் எரித்(ந்)திட!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: நண்பர் இரவிஜி அவர்களின் வலைப்பூ!

20 கருத்துகள்:

  1. அடுத்தொன்றை உயர்த்திட... அருமையாக சொன்னீங்க.

    பதிலளிநீக்கு
  2. அருமை! வரிகள் அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. ஒப்பீடு மனம் நிலைகுலையச் செய்தது
    ஆயினும் அதுதானே இங்கு யதார்த்த
    நிகழ்வாயிருக்கிறது
    மனதை தொந்தரவு செய்யும் பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தைப் பார்த்த உடன் எழுந்த எண்ணங்கள் அவை!
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

      நீக்கு
  4. படமும் கவிதையும் நெகிழ வைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் உளமார்ந்த நன்றி!

      நீக்கு
  5. காலச் சக்கரத்தில் கட்டுண்டு
    வாழ்க்கைப் பயணத்தில்
    வண்டிக்குள் கால்நடையாய் கனக்கும் வாழ்வு ..!

    பதிலளிநீக்கு
  6. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  7. படம்..... இந்த உழைப்பாளியை வணங்குகிறேன்......

    நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  8. இந்தப் படம் பார்த்தவுடன் ஒரு பாதிப்பை மனதுள் தோற்றுவித்தது! தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  9. சாரமாயிருந்த சவுக்குகள் அடுப்பெரிக்கவாவது பத்திரப்படுத்தப்படுகின்றன. சாரமிழந்த மனிதர்கள் அதனினும் கீழாய்... பரிதவிக்கிறது மனம்.

    மனம் தொட்ட கவிதைக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. //காலச் சக்கரத்தில் கட்டுண்டு வாழ்க்கைப் பயணத்தில் வண்டிக்குள் கால்நடையாய் கனக்கும் வாழ்வு ..!//

    மனம் தொட்ட கவிதைக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  11. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு