வியாழன், 18 ஜூலை, 2013

ஒட்டுறவு!



ஒட்டுறவு!

நண்பனின் மறைவுக்கு
கண்ணீர் அஞ்சலியாய்
நட்பு வட்டங்கள்
ஒட்டிய சுவரொட்டி!

ஒடுங்கிய வயிறும்
இடுங்கிய கண்களுமாய்-அதைப்
படித்த கிழவிக்கு
பனித்தன கண்கள்!

எதையொட்டி ஏங்குகிறாள்?
ஒட்டிய உறவுக்கா? ஒட்டுறவுக்கா?
-காரஞ்சன்(சேஷ்)
 

24 கருத்துகள்:

  1. பயணிக்கும்போது கண்ணில் பட்ட காட்சிக்கு எழுதிய கவிதை இது!தங்களின் வருகைக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  2. எதையொட்டி ஏங்குகிறாள்?
    ஒட்டிய உறவுக்கா? ஒட்டுறவுக்கா?


    அருமை அருமை
    அதிகம் சிந்திக்கச் செய்த வரிகள்
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  3. வித்தியாசமான சிந்தனை கவிதையாக வந்திருக்கே....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  4. ஒரு காலத்தில் நம்முடன் ஒட்டிய உறவு. இன்று சுவற்றில் ஒட்டப்பட்ட உறவானதே என்ற ஏக்க உணர்வுகளை அழகாக ஓர் கவிதையாக்கி உள்ளீர்கள்.

    மாறுபட்ட சிந்தனைகள் அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. தங்களின் வருகை மகிழ்வளித்தது! வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  6. அருமை! காட்சிகள் கொடுக்கும் கவிதைக்கு வலிமை அதிகம்! சிறப்பான படைப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. ஒட்டிய உறவுக்கா? ஒட்டுறவுக்கா?

    ஏங்கிய சிந்தனை கனக்கவைத்தது..!

    பதிலளிநீக்கு
  8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  9. சிந்திக்க வைத்த கவிதை.

    நன்றி சேஷாத்ரி.....

    பதிலளிநீக்கு
  10. வித்தியாசமான சிந்தனை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  11. உயிர்கள் வேறானாலும்
    அனைவருக்கும் உணர்ச்சிகள்
    ஒன்றுதான் நண்பரே!

    அதுதான் கவிதையில்
    பிரதிபலித்தது

    பதிலளிநீக்கு
  12. ஒட்டியிருந்த உறவுகள் வெட்டி விட்டதால் வந்த ஏக்கமாக இருக்கலாம்...நெகிழச்செய்யும் வரிகள்...

    பதிலளிநீக்கு