வியாழன், 11 ஜூலை, 2013

படித்ததில் பிடித்தது!- காரஞ்சன்(சேஷ்)படித்ததில் பிடித்தது:-


எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!


பட உதவி: கூகிளுக்கு நன்றி!
மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)

22 கருத்துகள்:

 1. இதில் அதிசயம் என்னவென்றால் அனைத்து கணக்குகளும் புற கருவிகள் இன்றி. மனதிலேயே செய்ததுதான் .

  என்ன செய்வது ?
  கையை பிடித்து நாடிகளின் துடிப்பை வைத்து உடலின் அனைத்து இயக்கங்களையும் ஆய்வு செய்த நம்முடைய முன்னோர்கள் எங்கே?

  எதற்கெடுத்தாலும் வெளிநாட்டிலிருந்து பல கோடி ரூபாய் செலவில் கருவிகளை இறக்குமதி செய்து அது தரும் பொய்யான தகவல்களை நாடி காசை ஒழிக்கும் இக்கால அவலம் எங்கே?

  பதிலளிநீக்கு
 2. கையை பிடித்து நாடிகளின் துடிப்பை வைத்து உடலின் அனைத்து இயக்கங்களையும் ஆய்வு செய்த நம்முடைய முன்னோர்கள் எங்கே?

  எதற்கெடுத்தாலும் வெளிநாட்டிலிருந்து பல கோடி ரூபாய் செலவில் கருவிகளை இறக்குமதி செய்து அது தரும் பொய்யான தகவல்களை நாடி காசை ஒழிக்கும் இக்கால அவலம் எங்கே?//

  நோய்நாடி நோய்முதல் நாடி என்பதெல்லாம் இப்போது இல்லை!
  தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றீ ஐயா!

  பதிலளிநீக்கு
 3. அற்புதமான தகவல் பகிர்வுக்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 4. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றி!

  பதிலளிநீக்கு
 5. மிகவும் அருமையான தகவல்கள்.

  ஆம் ஆச்சர்யமே தான். இவற்றில் பல விஷயங்கள் நான் பள்ளியில் படிக்கும்போதே உண்டு.

  இந்தக்காலப்பிள்ளைகளுக்கு 5 + 3 = 8 என்று சொல்வதற்கு நிச்சயமாக கால்குலேட்டர்கள் தேவைப்படுகிறது.

  பின்னக்கணக்குகள் பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரிய சான்ஸே இல்லை.

  இந்தக்கால கணக்குப் படிப்பில், மனக்கணக்குக்கோ, மூளையை உபயோகிக்கவோ, குழந்தைகளுக்கு வாய்ப்பு தரப்படுவது இல்லை.

  இப்போதெல்லாம் துபாய் போன்ற வெளி நாடுகளில் பள்ளிக்குச்செல்லும் குழந்தைகளுக்கு புஸ்தகம், நோட்டு, பேனா பென்சில் எதுவும் கிடையாதாம். I.PAD, LAP TOP போன்றவை மட்டும் தானாம்.

  போகிற போக்கைப்பார்த்தால், வரும் தலைமுறையினருக்கு பேனா பென்சில் பிடித்து சுத்தமாக எழுதவும் தெரியப்போவது இல்லை. ;(

  நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 6. //இந்தக்காலப்பிள்ளைகளுக்கு 5 + 3 = 8 என்று சொல்வதற்கு நிச்சயமாக கால்குலேட்டர்கள் தேவைப்படுகிறது.

  பின்னக்கணக்குகள் பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரிய சான்ஸே இல்லை.

  இந்தக்கால கணக்குப் படிப்பில், மனக்கணக்குக்கோ, மூளையை உபயோகிக்கவோ, குழந்தைகளுக்கு வாய்ப்பு தரப்படுவது இல்லை.
  //
  உண்மைதான் ஐயா! மனக்கணக்கு, பின்ன வாய்பாடெல்லாம் இப்போது வழக்கொழிந்த நிலையில் உள்ளன! தங்களின் வரவுக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 7. சிறப்பான தகவல்கள் ஐயா... நன்றி... பெரியவர்களின் கருத்துகளும் அருமை... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 8. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 9. சிறப்பான தகவல்கள். எத்தனையோ விஷயங்களை கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இருந்தும் நமது நாடு இன்னும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது அரசியல்வாதிகளால்.....

  பதிலளிநீக்கு
 10. அறியாதன் அறிந்தோம்
  பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. தங்களின் வரவும் கருத்துரையும் மகிழ்வளித்தது, நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 12. அருமையான விஷயம். பகிர்வுக்கு நன்றி.

  தாங்கள் கேட்டிருந்தபடி தயிரின் தொடர்ச்சியை பதிவிட்டிருந்தேன்...முடிந்த போது பார்க்கவும்.

  http://kovai2delhi.blogspot.in/2013/07/blog-post_8.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! தயிர் உறைந்ததை உரைத்த விதம் அருமை! நன்றி!

   நீக்கு
 13. நானும் படித்திருக்கிறேன்! அக்கால தமிழர்கள் கணக்கில் புலியாக இருந்திருக்கிறார்கள்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 14. ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
  சாதித்து விட்டோம்..!

  வியக்கவைக்கும் தகவல்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி!

   நீக்கு
 15. கணிதமாக இருந்தாலும் சரி கணினியாக இருந்தாலும் சரி தமிழன் அதில் புலியாகத்தான் இருக்கிறான், இதை ஒரு மலையாளி நண்பன் சொல்லி வியந்தது...!

  பதிலளிநீக்கு
 16. உண்மைதான்! தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி !

  பதிலளிநீக்கு