நலம் தருவாய் நரசிம்மா!
அகந்தைக்கிழங்கை
அழித்திடவோ
நகத்துடனும்,
சிங்கமுகத்துடனும்
நான்காம் அவதாரமென
நரசிம்மா நீ
உதித்தாய்!
அகத் தாமரையில்
அமரவைத் துன்னை
அனுதினம் துதித்தவனின்
துயரினைக் களைந்திட
வானளந்த திருவுருவே
தூணினுள்நீ உதித்தனையோ!
தோன்றிய நாள்முதலாய்
தொடர்ந்து வரும்
துயரம்
‘மா’வினுள்
வண்டினைப்போல்
மனதுள்ளே வளருதப்பா!
பாதமலர் பற்றிநின்றேன்
பரந்தாமா துயர்
களைவாய்!
வேதநெறி அறியேன்!
ஓதும் விதியறியேன்!
சாத்திரம் அறியேன்!
சாற்றுமுறை
நானறியேன்!
அரிநாமமொன்றேதான்
அறுதுயர் களையுமென
போற்றித் துதிக்க
வந்தேன்
ஏற்று எமக்கருள்வாய்!
நாவால் நின்திருநாமம்
நம்பி நவில்பவர்க்கு
நல்வினைகள் சூழ்ந்தென்றும்
நலம்பலவும் பெருகாதோ?
உதிக்கின்ற கதிரொத்த
உன்பார்வை பட்டாலே
பனிவிலகல் போலெந்தன்
பாபங்கள் விலகாதோ?
சங்கொடு சக்கரமும்
என்றுமிடர் அகற்றாதோ?
மன்னுபுகழ் மாயவனின்
மனங்குளிரச் செய்பவளே!
உலகளந்த திருவடியின்
உயர்மடியில் அமர்ந்தவளே!
செங்கமலக் கண்களினால்
சினம்தணியச் செய்பவளின்
அருட்பார்வை பட்டாலே
அகலாத துயருமுண்டோ?
அகிலத்தைக் காத்திட
ஆராய்ந்து அருள்பவனே!
படைப்புகள் அனைத்துள்ளும்
படைத்தநீ உறைகின்றாய்!
பிறவித்துயர் களைய-நின் அருட்பார்வை அருளாயோ?
நரசிங்கா நின்நாமம்
நாவால் துதிப்பவர்தம்
எண்ணத்தில் உறைந்து
ஏற்றம் அருள்பவனே!
வாடி வருவோர்க்கு
ஈடில்லா பெருமகிழ்வை
என்றும் அருள்வாயே!
தேரேறும் நின்னருளால்
நீரேறி நெல்விளையும்
பூவரசங் குப்பமுறை
புண்ணியன் நின்நாமத்தை
எண்ணித் துதிப்போர்க்கு
என்றுமினி துயருமிலை!
அழகிய சிங்கனின் துதி
பதிலளிநீக்குஅருமை
பாராட்டுக்கள்
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!
பதிலளிநீக்குநலம் தரும் நரசிம்மனின் நாமம் துதித்த விதம் அருமை! மாம்பழத்துள் வண்டு-மனத்தினுள் துயர்! அருமை! தொடர்க! பாராட்டுகள்!
பதிலளிநீக்குதங்களின் பாராட்டிற்கு நன்றி!
நீக்குசிறப்பான வரிகள்.... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
நன்றி ஐயா! தங்களுக்கும் என்இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
நீக்குநரசிம்மன் பாதம் போற்றி பணிவோம்! அருமையான கவிப் பாடல் துதி! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா!
நீக்குவேதநெறி அறியேன்!
பதிலளிநீக்குஓதும் விதியறியேன்!
சாத்திரம் அறியேன்!
சாற்றுமுறை நானறியேன்!
அரிநாமமொன்றேதான்
அறுதுயர் களையுமென
போற்றித் துதிக்க வந்தேன்
ஏற்று எமக்கருள்வாய்!//
Let HIM bless u with all the good things in life!
Shanmugasundaram Ellappan
Thank You!
நீக்குஎண்ணித் துதிப்போருக்கு
பதிலளிநீக்குநிச்சயமாய் துயரில்லை
மனம் கொள்ளை கொண்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
தங்களின் வருகை மகிழ்வளித்தது! தங்களுக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
நீக்குதங்களின் வெற்றிகரமான
பதிலளிநீக்கு100 ஆவது பதிவுக்கு என்
மனமார்ந்த பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
அன்புட்ன்,
VGK
தங்களின் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன்!நன்றி ஐயா!
நீக்கு"நலம் தருவாய் நரசிம்மா!"
பதிலளிநீக்குஅழகான தலைப்பு.
அருமையான படைப்பு.
லக்ஷ்மி நரசிம்ஹர் படம் அழகோ அழகு.
என்னுடைய 199 ஆவது பதிவும் இதே
ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ஹரைப்பற்றியதே.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_28.html
அன்புடன்
VGK
படித்து மகிழ்ந்தேன்! நன்றி ஐயா!
நீக்குபெரிய மண்டைபோல இருந்த அந்தப்பொடியனின் படத்தை, என் வேண்டுகோளின்படி சிறியதாக்கியதற்கு என் நன்றிகள். அதனாலோ என்னவோ இன்று, தங்களின் பின்னூட்டப்பெட்டி உடனே திறந்து கொண்டது. திறப்பதில் சிரமம ஏதும் இல்லை.
பதிலளிநீக்குமற்றபடி மிந்தடை போன்ற அனைத்து சிரமங்களும் மட்டுமே உள்ளன.
ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹர் அருளால் அனைத்துத் தடைகளும் விலக வேண்டும். பார்ப்போம்.
அன்புடன்
VGK
கடைக்கண் அருளால் தடைகள் விலகிடும்! நன்றி ஐயா! தங்களுக்கு என் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
நீக்குசிறப்பான கவிதை.
பதிலளிநீக்குலக்ஷ்மி நரசிம்ஹர் அருள் அனைவருக்கும் பாலிக்கட்டும்....
தங்களின் வருகை மகிழ்வளித்தது! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்குsuperb worship
பதிலளிநீக்குanthuvan cuddalore
பூவரசங் குப்பமுறை
பதிலளிநீக்குபுண்ணியன் நரசிம்மனின்
புகழ்பாடும் அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள்..
தங்களின் கருத்துரைக்கு நன்றி!
நீக்குஅன்பின் சேஷாத்ரி - 100 வது பதிவினிற்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - ந்லம் தருவாய் நரசிம்மா - அருமையான கவிதை - படமோ சூப்பர் - லக்ஷ்மி நரசிம்மரின் அருள் அனைவருக்கும் கிடைக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு