கதவினைத் திறந்துவைத்து
காத்திருப்பேன் அனுதினமும்
உதிக்கின்ற கதிரவனொடு
உன்னையும் காண்பதற்காய்!
காத்திருந்தாயோ?- நீயும்
கதவுகள் திறந்திடவே!
விரைந்து நுழைகிறாய்
வீட்டிற்குள் துணிவுடனே!
தரையில் இரைத்துவைத்தேன்
தானியங்கள் சிலவற்றை!
தத்திநடந்தே அவற்றைக்
கொத்தித் தின்கிறாய்!
ஓரமாய் நான்
உட்கார்ந்திருந்தாலும்
விர்ரென்று எனைச்சுற்றி
விரைந்து பறக்கின்றாய்!
மின்விசிறி ஓரமாய்
மேலேநீ பறப்பதனால்
புழுக்கத்தையும் உனக்காகப்
பொறுத்துக் கொள்கிறேன்!
கண்ணாடியில் உன்முகத்தைக்
கண்டுஏன் கொத்துகின்றாய்!
துணையைக் கவர்ந்ததாய்
தோன்றியதோ உந்தனுக்கு!
சுற்றும் உன்னுடனே
சுற்றவைத்தாய் என்மனதை!
அலைபேசி கதிர்வீச்சால்
அருகிடுதாம் உந்தன் இனம்!
விழிப்புணர்வு ஏற்படுத்த
விழைந்த சிறுவர்கள்
ஒருங்கிணைந்து நின்று
உண்டாக்கினர் உன்னுருவம்!
வாழையடி வாழையாய்
வாழ வகைசெய்வோம்!
உன்குரல் ஒலிப்பினிலே--நாளும்
உலகம் விழிக்கட்டும் !
-காரஞ்சன்(சேஷ்)
படங்கள்: காரஞ்சன்(சேஷ்) மற்றும்தினமலர்
சிறப்பான படங்கள் மற்றும் கவிதை.
பதிலளிநீக்குஅருகி வரும் ஒரு பறவை பற்றிய பகிர்வுக்கு நன்றி.
தங்களின் உடனடி வருகைக்கு நன்றி நண்பரே!
நீக்குமுடிவிலும் சிறப்பான வரிகள்... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி ஐயா!
நீக்குஅருமை சார் . பார்க்கும் படங்கள் எல்லாம் கவிதை ஆகிறது . தொடரட்டும் உங்கள் கவிப்பணி.
பதிலளிநீக்குமுகுந்தன்
நன்றி முகுந்தன்
நீக்குபடங்களும் அதற்கான கவிதையும்
பதிலளிநீக்குமிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ஐயா! தளரும் வயதில் மலரும் நினைவுகள் படித்தீர்களா? நன்றி!
பதிலளிநீக்குவாழையடி வாழையாய்
பதிலளிநீக்குவாழ வகைசெய்வோம்!
உன்குரல் ஒலிப்பினிலே--நாளும்
உலகம் விழிக்கட்டும்
மிகவும் சிறப்பான வரிகள்
தங்களின் வருகைக்கு நன்றி!
பதிலளிநீக்குசிறப்பான சிட்டுக்குருவி கவிதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குnalla kavi sako!
பதிலளிநீக்குmaarumaa ulakam...
தங்களின் வருகை மகிழ்விக்கிறது. நன்றி!
நீக்குவாழையடி வாழையாய்
பதிலளிநீக்குவாழ வகைசெய்வோம்!
வாழ வைக்கும் சிந்தனைக்குப் பாராட்டுக்கள்..
unbelivable words thanks for giving me a chance to read your touching words
பதிலளிநீக்குanthuvan cuddalore
மிகவும் அருமையான கவிதை வரிகள்.
பதிலளிநீக்குரஸித்துப்படித்தேன்
மின்விசிறியில் அடிபடக்கூடாதே என
உடலும் மனமும் பதறி புழுங்கியது அருமை.
பாராட்டுக்கள். அன்புடன் VGK
நன்றி ஐயா!
பதிலளிநீக்கு