வாரீரோ குருவிகளே!
ஓலைகளில் கூடுகட்டி
ஒலியெழுப்பும் குருவிகளே!
எட்டாத பனைமரத்தில்
கட்டிவைத்தீர் பலகூடு!
வறுமையின் வரவுக்கு
வாசல்கள் திறந்திருக்கும்
வட்டக் குழாயொன்றே
வசித்திடும் எம்வீடு!
சிறகடிக்கும் பருவத்தில்
வறுமையெனும் சுமையை
வைத்திட்டார் எந்தலையில்
உந்தலையில் பனங்காய்போல்!
பள்ளிச் சீருடைதான்
பண்டிகைக்கு உடையென்பார்!
ஆடையுடன் பிறந்தநீர்
அறிவீரோ எம்துயரை?
இருந்தவை இல்லையெனில்
இருப்போர்க்குப் பெருந்துயரம்!
இல்லை யென்பதொன்றே
இல்லாதார் படும்துயரம்!
வாழ்க்கை வரைபடத்தில்
வறுமைக்கும் கோடு உண்டு!
இல்லாதோர்க்கு- அது
எட்டிடா உயரத்தில்!
இருப்பவர் கண்களுக்கோ
இ(ர)றக்கக் கோணத்திலும்-அது
எட்டாத தூரத்தில்!
வறுமைத் தளையறுந்து-எம்
வாழ்வுநிலை உயர்ந்திடவே
வாழ்த்திப் பாடிட இங்கு
வாரீரோ குருவிகளே!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
இரு படங்களையும் இணைத்த கவிதை அருமை! நற்சிந்தனை! தொடர்க!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
பதிலளிநீக்குஇரண்டு படங்களையும் இணைத்து யோசித்த விதம்
பதிலளிநீக்குமனம் கவர்ந்தது
குருவிக் கூடு அழகு
குழாய்க் கூடு ?
அதனால்தான் ஐயா
நீக்குவறுமைத் தளையறுந்து-எம்
வாழ்வுநிலை உயர்ந்திடவே
வாழ்த்திப் பாடிட இங்கு
வாரீரோ குருவிகளே!
--என ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்! தங்களின் வரவு மகிழ்வளித்தது
இருந்தவை இல்லையெனில்
பதிலளிநீக்குஇருப்போர்க்குப் பெருந்துயரம்!
இல்லை யென்பதொன்றே
இல்லாதார் படும்துயரம்.. fantastic..
Shanmugasundaram Ellappan
நன்றி நண்பரே!
நீக்குarumai!
பதிலளிநீக்குsonthame....
நல்ல வரிகள்...
பதிலளிநீக்குஅருமையாக முடித்துள்ளது சிறப்பு...
நன்றி ஐயா...
நன்றீ ஐயா!
நீக்குகுருவிகலையே காண முடியாத தருணத்தில் ,தூக்கனாக் குருவியை படத்தில் கூட்டோடு பார்த்தது சந்தோசமாய் உள்ளது .நன்றி நண்பரே
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி!
பதிலளிநீக்குமிகவும் நல்ல வரிகள்...மிக அருமையாக முடித்திருக்கிறிர்கள்.....
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
நிரம்பி இருக்க வேண்டிய குருவிக் கூடு..., காலியாய்!!...
பதிலளிநீக்குகாலியாக இருக்க வேண்டிய குழாய்க் கூடு..., மனிதர்கள் வீடாய்!! என்று மாறும் இந்நிலை??!!
இரு படங்களையும் இணைத்துப் பார்த்தபோது இந்த ஆதங்கம் எனக்குள் எழுந்தது! அதன் வெளிப்பாடாய் அமைந்ததுதான் இக்கவிதை! தங்களின் வருகைக்கு நன்றி!
பதிலளிநீக்குபடமும்
பதிலளிநீக்குகவிதையும் அருமை.
பாராட்டுக்கள்
சோதனை குழாயில்
குழந்தையை
உருவாக்குகிறது
விஞ்ஞானம்
நாமோ குடிநீர்
குழாயில் உருவாக்குகிறோம்
எதிர்கால
சந்ததிகளை
அதுதான் நம்
நாட்டின் 60 ஆண்டுகால
அசுர வளர்ச்சி
குருவிகள் தனக்கு தானே
வீடு கட்டிக்கொண்டு
வசிக்கின்றன
கேடு கெட்ட மனிதர்கள்
அரசு வீடு கட்டிகொடுக்கும்
என்று நம்பி அரசியல்வாதிகளுக்கு லஞ்சம்
கொடுத்துவிட்டு அரசு மதுக்கடையில்
மதுவை வாங்கி குடித்துவிட்டு
சாலை ஓரம்
மயங்கி கிடக்கிறார்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
பதிலளிநீக்குஇரு படங்களையும் இணைத்து கவிதையாகப் படைத்தது சிறப்பு. இல்லாதோர் வாழ்க்கை.... வருத்தம் தான் நண்பரே...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குமனதை தொட்டு வருடிய கவிதை . நன்றி சார்
பதிலளிநீக்குமுகுந்தன்
நன்றி!
நீக்குசிறப்பு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குwhere u capture this photos and lines are gem go ahead sesh
பதிலளிநீக்குanthuvan cuddalore
Only from the Net. Thank You for your comments
பதிலளிநீக்குவாரீரோ குருவிகளே!
பதிலளிநீக்குகுருவிகளை வரவேற்கும் அருமையான கவிதை.
குருவிகளை இப்போதெல்லாம் இதுபோலக்
கவிதைகளில் மட்டுமே கான முடிகிறது. ;(
பாராட்டுக்கள். அன்புடன் VGK
தங்களின் தகவலுக்கு நன்றி ஐயா!
பதிலளிநீக்கு