ஞாயிறு, 23 மார்ச், 2014

உந்துசக்தி! -காரஞ்சன்(சேஷ்)

                               உந்து சக்தி!
இழந்ததை எண்ணி
உழன்று சுருளாமல்
இருப்பதைக் கொண்டு
இய(ங்)க்கும் இவர்
உந்து சக்தியை
உற்பத்தி செய்து
தளர்ந்த மனங்களில்
தன்னம்பிக்கையை
விதைக்கின்றார்!

தன்னைத் தான்நம்பி
தடைகளைத் தகர்த்தெறிய
நம்பிக் கையேந்தும் கோல்
நம்பிக்கையின் அளவுகோல்!

விஞ்சிய நெஞ்சுரத்தால்
விந்தை புரியுமிவர்
தளரா மனத்திற்கென்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!
                             -காரஞ்சன் (சேஷ்)

பட உதவிக்கு நன்றி: மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.

20 கருத்துகள்:

 1. உந்து சக்தியை
  உற்பத்தி செய்து
  தளர்ந்த மனங்களில்
  தன்னம்பிக்கையை
  விதைக்கின்றார்!

  தன்னம்பிக்கைக்குத் தலை வணங்குவோம்..!

  பதிலளிநீக்கு
 2. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 3. உண்மையில் தன்னம்பிக்கையின் மறுஉருவே இவர். பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 4. //தன்னம்பிக்கைக்குத் தலை வணங்குவோம்..!//

  அருமையான வரிகளுடன் நல்லதொரு படைப்பு.

  பதிலளிநீக்கு
 5. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 6. நம்பிக்கை தந்தவர் இவர்.......

  நல்ல கவிதை. பாராட்டுகள் சேஷாத்ரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 7. சொல்ல வார்த்தைகள் இல்லை...

  தலை வணங்குகிறேன்...

  பதிலளிநீக்கு
 8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 9. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 10. தன்னம்பிக்கை மனிதர்! பாராட்ட வார்த்தைகள் இல்லை! அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 12. அன்பின் காரஞ்சன் - அருமையான் கவிதை - தன்னம்பிக்கையினை மையமாக வைத்தெழுதப்பட்ட கவிதை. படம் தேர்ந்தெடுத்துப் போடப் பட்டிருக்கிறது. -

  // விஞ்சிய நெஞ்சுரத்தால்
  விந்தை புரியுமிவர்
  தளரா மனத்திற்கென்
  தலைதாழ்ந்த வணக்கங்கள்! //

  நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 13. தன்னம்பிக்கை மனிதர். அருமை.

  பதிலளிநீக்கு
 14. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 15. தளரா மனதுக்கென் தலைதாழ்ந்த வணக்கங்கள் --

  பதிலளிநீக்கு
 16. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 17. தளரா மனதுக்கென் தலைதாழ்ந்த வணக்கங்கள்.
  அருமை! நம்பிக்கை வளர்க்கும் மனிதரும் கவிதையும் அழகு!

  பதிலளிநீக்கு