புதன், 26 மார்ச், 2014

வகுத்தல் பிழை! -காரஞ்சன் (சேஷ்)


                                                            வகுத்தல் பிழை!



கழித்த பொருட்களை
கண்டெடுத்துப் பொதியாக்கி
வயிற்றைக் கழுவ
வழிதேடி வைத்துள்ளார்!
 
கட்டிவைத்த பொதிமீது
கண்ணுறங்கும் இவருக்கு
உறைவிடம் குறித்து
ஒருபோதும் கவலையில்லை!

இருப்பைப் பெருக்கிட
இருப்பவர் தாம்முயன்று
உறக்கம் தொலைந்(த்)து
உலகில் உழல்கின்றார்!

பகுத்தல் இல்லா
வாழ்க்கைக் கணக்கில்
வகுத்தல் பிழையோ?

                                               -காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு நன்றி: மாயவரத்தான் எம்.ஜி.ஆர்

17 கருத்துகள்:

  1. தவறான கணக்கால் இது போல் "நிம்மதியான" தூக்கம் பலருக்குமில்லை என்பதும் உண்மை...

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  3. தாங்கள் வகுத்துக்கொடுத்துள்ள படைப்பு, எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து, பெருக்கி வகுத்துப்பார்க்க வைக்கின்றது.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வருகை மகிழ்வளித்தது! ஆய்ந்த கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  5. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  6. அருமையான கவிதை. படம் பார்த்தவுடன் எங்கேயோ பார்த்த நினைவு என யோசித்தேன். படித்து முடிக்கும்போது நினைவுக்கு வந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  7. பகுத்தல் இல்லா
    வாழ்க்கைக் கணக்கில்
    வகுத்தல் பிழையோ?
    வாழ்க்கைக் கணக்கோ..!

    பதிலளிநீக்கு
  8. இருப்பைப் பெருக்கிட
    இருப்பவர் தாம்முயன்று
    உறக்கம் தொலைந்(த்)து
    உலகில் உழல்கின்றார்!

    நல்ல கருத்தும் கவிதையும்
    வட்டிக் கணக்கு பார்ப்பவர்
    வாழ்க்கையை தொலைத்திட
    வளமாய் வாழா விட்டாலும்
    வறியவர்க்கு வரும் நிம்தியான உறக்கம்!

    பதிலளிநீக்கு
  9. பகுத்தல் இல்லா
    வாழ்க்கைக் கணக்கில்
    வகுத்தல் பிழையோ?//


    வாழ்க்கையில் பகுத்தல் நல்லது.
    அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  10. கட்டிவைத்த பொதிமீது
    கண்ணுறங்கும் இவருக்கு
    உறைவிடம் குறித்து
    ஒருபோதும் கவலையில்லை!
    = நெகிழ வைக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!




    பதிலளிநீக்கு

  12. அருமை.
    Snehithamuthu Muthukumar

    பதிலளிநீக்கு
  13. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு