வெள்ளி, 28 மார்ச், 2014

வெள்ளி எழும்வரை.... காரஞ்சன் (சேஷ்)


                                                       வெள்ளி எழும்வரை!
வெள்ளிஅலைதனை  
வீசி மகிழ்ந்திடும்
நீலக்கடல் பாரம்மா!
 
நீல நிறத்தினில் 
நெஞ்சம் நிறைத்திடும்
வங்கக்கடல் தானம்மா!
 
நம்மை வளமுடன்
வாழ வழிசெயும்
நம்குலத் தெய்வமம்மா!
 
வீசும் அலைவந்து
நேசமுடன் நம்மின்
பாதம் வருடுமம்மா!
 
சீற்றம் மிகுந்திடின்
சேனைபோல் வந்து
சேதம் விளைக்குமம்மா!

திங்கள் ஒளியினில்
எங்கள் பயணங்கள்
நெஞ்சில் நிலைக்குதம்மா!
 
கட்டுமரம் கொண்டும்
கொட்டும் மழையிலும்
எட்டி வலைவிரிப்போம்!

வெள்ளி எழுந்திட
விரித்த வலையொடு
வாரியில் காத்திருப்போம்!

துள்ளி மறைந்திடும்
வெள்ளி மீன்வகை
அள்ளித் திரும்பிடுவோம்!

சீறும் அலையுடன்
வாரி வழங்கினும்
சேதம் அதற்கிலையே!

எல்லை கடந்திடின்
இன்னல் இழைப்பது
இன்னமும் ஓயலையே!

உந்தன் தலைமுறை
இந்தக் கடலினை
சொந்தமெனக் கொள்ளுமே!

இன்னல் அகற்றிட
ஏற்ற வழிகண்டு
இன்ப வெள்ளம் பொங்குமே!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

16 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  எல்லை கடந்திடின்இன்னல் இழைப்பதுஇன்னமும் ஓயலையே!

  உந்தன் தலைமுறைஇந்தக் கடலினைசொந்தமெனக் கொள்ளுமே!

  கவிதை மிக அருமையாக உள்ளது.....
  என்ன செய்வது...காலம் பதில் சொல்லும் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்....ஐயா

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! கருத்துரைக்கு மிக்க நன்றி!

   நீக்கு
 2. வீசும் அலைவந்து
  நேசமுடன் நம்மின்
  பாதம் வருடுமம்மா!//

  அருமையான வரிகள்.
  கவிதை மிக நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. ஆஹா அருமை அருமை! அத்தனையும் முத்துக்கள் ரசித்தேன் ஒவ்வொரு வரிகளையும். வாழ்த்துக்கள் .....!

  பதிலளிநீக்கு
 4. உலகத்தின் தூக்கம் கலையாதோ?
  உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ?
  உழைப்பவர் வாழ்க்கை மலராதோ?
  ஒரு நாள் பொழுதும் புலராதோ?

  // தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத்
  தண்ணீரில் திளைக்க வைத்தான்
  கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக்
  கண்ணீரில் குளிக்க வைத்தான் //

  இந்தப் பாடல் தான் ஞாபகம் வந்தது ஐயா...

  பதிலளிநீக்கு
 5. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 6. உந்தன் தலைமுறை
  இந்தக் கடலினை
  சொந்தமெனக் கொள்ளுமே!

  கண்ணீரும் கரைந்து
  கரைமேல் இனிய வாழ்வு மலரட்டும்..!

  பதிலளிநீக்கு
 7. கடலை கண்முன்னே விவரித்து சென்றது கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. கடல் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது......

  உங்கள் பதிவுகளும்...

  வாழ்த்துகள் சேஷாத்ரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 9. நீலக்கடல் கவிதை மிக அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 10. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 11. //உந்தன் தலைமுறை
  இந்தக் கடலினை
  சொந்தமெனக் கொள்ளுமே!//

  சூப்பர் !

  யாருக்குமே கண்ணீர் இல்லாத இனிய வாழ்வு மலரட்டும்..!

  பதிலளிநீக்கு
 12. தங்களின் வருகை ஆனந்தமளிக்கிறது! கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு