ஞாயிறு, 30 மார்ச், 2014

ஆனந்த அலைகள்! -காரஞ்சன்(சேஷ்)


 ஆனந்த அலைகள்!


அந்தப் புறநகர்ப்பகுதிக்குள் செல்லும்போதெல்லாம்
ஆனந்த நினைவலைகள் என்னுள்!


சிறுவயது மகளுடன்
சிறுவனாய் மாறி
மழையை இரசித்த தருணங்கள்!


வாசலில் இருந்த வேப்பமரம்
விரித்த குடையாய்
வெயிற்காலத்தில்!
 
அவளுக்குப் பறவைகளின்
அறிமுகம் அங்குதான்!


மாலைநேரத்தில்
மரத்தில் கூடும்
மனம்கவரும் பறவைகளின்
மழலை மொழிகள்!

அவ்வப்போது
கடந்து செல்லும்
இரயில் வண்டியின் கூவல்கள்!
தலையாட்டிய  பூம்பூம் மாட்டையும், வேட்டிசட்டை கேட்ட
குடுகுடுப்பைக் காரரையும்,

மகுடி ஊதிய பாம்பாட்டியையும்
கூடையிலிருந்து வெளிவந்து
ஆடிய பாம்பையும்
மாடியிலிருந்து மகள் இரசித்தாள்!


வண்ண வண்ண பலூன்களை
வாங்கித் தர அடம்பிடித்து
அழுத்தி வெடித்துவிட்டு
அதற்கும் அழுது நிற்பாள்!

 
நீங்கா நினைவுகளில்
என்னுள் சொந்தமாய்
முன்னம்  நாங்கள் குடியிருந்த
அந்த வாடகை வீடு!

-காரஞ்சன்(சேஷ்)

26 கருத்துகள்:

 1. சில இடங்கள் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக்கொள்ளும்! அனுபவித்து எழுதப்பட்ட கவிதை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. ரசிக்க வைத்த இனிய நினைவுகள் ஐயா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. ஆனந்த அலைகள் -நீங்காத நினைவுகளாய்
  நினைவுக்கடலில் நீந்தும் சுகமான நினவுகள்..!

  பதிலளிநீக்கு
 4. நீங்கா நினைவுகள் சில இடம் .வாடகை வீடும் ரசித்து எழுதிய விதம் அருமை.

  பதிலளிநீக்கு
 5. நீங்கா நினைவுகள் தாம்..... குடியிருந்த வீடு வாடகை வீடாக இருப்பினும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 6. சிறுவயது மகளுடன்

  சிறுவனாய் மாறி

  மழையை இரசித்த தருணங்கள்!//

  நானும் ரசித்தேன் கவிதையில் அந்த இனிய நினைவுகளை.

  பதிலளிநீக்கு
 7. ரசிக்க வைத்த இனிய நினைவுகள்

  பதிலளிநீக்கு
 8. ரசிக்க வைத்த இனிய நினைவுகள். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 9. மலரும் நினைவுகள் அருமை ஐயா
  சொந்த வீட்டிற்கு வந்துவிட்ட போதிலும், முன்னர் இருந்த
  வாடகை வீட்டின் நினைவுகள் என்றுமே மறைவதில்லை

  பதிலளிநீக்கு
 10. இயற்கையை சுவைக்கும் உன் நினைவுகள் இன்னும் இளமையாக உள்ளது சேஷா !ஆனந்த அலைகள்!என்ன ஒரு
  அழகான தலைப்பு! KEEP IT UP SESHA!!

  பதிலளிநீக்கு
 11. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா!

  பதிலளிநீக்கு
 12. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 13. இருப்பவர்க்கு ஒரு வீடு...இல்லாதவர்க்கு பல வீடுகள்! இருந்த இடங்களின் நினைவுகள் இளமைதான் இனிமைதான்! நன்றி...!

  பதிலளிநீக்கு
 14. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 15. //நீங்கா நினைவுகளில்
  என்னுள் சொந்தமாய்
  முன்னம் நாங்கள் குடியிருந்த
  அந்த வாடகை வீடு!//

  வாடகை வீடாகினும் நீ ங் கா நினைவலைகள் சொந்தமாய் இருந்துள்ளன என முடித்துள்ளது அழகோ அழகு !

  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் இரட்டிப்பு மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

   நீக்கு
 16. பொருத்தமான படங்கள் நினைவலைகளுக்கு மேலும் வலுவூட்டுகின்றன. சந்தோஷம். தலைப்பு ஆனந்தம் அளிப்பதாக உள்ளது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு