வியாழன், 8 நவம்பர், 2012

அந்த மஞ்சள் நிறத்தவள்!....


இந்தச் சிறுவீட்டில்
இனிநனைய இடமுமில்லை.!
எவ்வளவு நேரம்தான்
அடுப்படியில் நான்
அடைந்து கிடப்பது?

அடுப்படியில் இருந்தால்
அடிவயிறு பசிக்காதா?
கடித்த துணி கிடக்க-எலி
காணாமற் போனதெங்கே?
கிடைத்தால் ஒரேஅடிதான்!
 
கிளியை வளர்த்தா
என் கையில் கொடுப்பார்கள்
என வெறுத்து வெளிவந்து
மரத்தடியில் பதுங்கிற்று-அந்த
 மஞ்சள் நிறப் பூனை!
          






-காரஞ்சன்(சேஷ்)

17 கருத்துகள்:

  1. படமும் அந்த நோக்கில் ஓடிய
    சிந்தனையும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. பூனை எப்படியெல்லாம் சிந்திக்கிறது...!

    சிந்தனை வரிகள் அருமை...

    பதிலளிநீக்கு
  3. பூனையின் சிந்தை யோசிக்க தான் வைத்தது.

    பதிலளிநீக்கு
  4. பூனையும் சிந்திக்கிறது...............அருமை.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  5. பூனைலாம் கூட எப்படிலாம் சிந்திக்குது.., ராஜி, உனக்கு மட்டும் ஏன் ஒரு உருப்படியான பதிவு போட சிந்தனையே வர மாட்டேங்குது?!

    பதிலளிநீக்கு
  6. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமைதான்! தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. கிளியை வளர்த்து பூனைகையில் கொடுத்து ஒரு பதிவு !

    பதிலளிநீக்கு
  8. பூனையின் சிந்தனைகள் அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. பத்து பத்திகள் .. தசாவதாரத்தைக் குறிக்க ,,
    நன்று ..

    பதிலளிநீக்கு