வியாழன், 6 மார்ச், 2014

உன்கையில் பொம்மையன்றோ? -காரஞ்சன் (சேஷ்)


உன்கையில் பொம்மையன்றோ?

 
 உரலிலே      கட்டுண்டாய் அன்று!    என்
 விரல்வண்ணம் ஏற்றிடவே வந்தாயோ இன்று!  
                
 மண்ணுண்ட மாயவனோ
 மண்பொம்மை வடிவினிலே!
 உன்கையில் பொம்மையன்றோ
 உயிர்களெலாம் உலகினிலே!
 
 உருவாக்கும் பொம்மைகளில்
 உன்னுருவம் காணும்
 பிறவிப்பயன் தனையே
 பெற்றுவிட்டேன் நானும்! 
 
  விரலேந்தும் குழலினிலே
  பிறக்கின்ற நாதம்
  ஈரேழு உலகினையும்
  இயக்குகின்ற கீதம்!
 

  மயக்கம் தெளிவிக்கும்
  மறைபொருளாய் நீயும்!
  அறியாதோர் செய்யும்பிழை
  பொறுத்தருள்வாய் நாளும்!
 

  -காரஞ்சன்(சேஷ்)

 

1954ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வெளிவந்த இந்த  ஒவியத்திற்கு எளியவன்  என் சொல்வண்ணம்!
  
வித்திட்ட விகடனுக்கு நன்றி!

30 கருத்துகள்:

  1. அருமை... அழகு...

    ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1954ல் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளிவந்த ஓவியத்திற்கு நான் தற்போது எழுதிய கவிதை இது! வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி ஐயா!

      நீக்கு
  2. விரலேந்தும் குழலினிலே
    பிறக்கின்ற நாதம்
    ஈரேழு உலகினையும்
    இயக்குகின்ற கீதம்!

    அழகு மிளிரும் வரிகள்..
    ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...
    பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1954ல் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளிவந்த ஓவியத்திற்கு நான் தற்போது எழுதிய கவிதை இது! வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  3. படித்தேன் ஐயா! மாற்ற முயற்சிக்கிறேன்! பயனுள்ள பகிர்வினித் தந்தமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

  4. //மயக்கம் தெளிவிக்கும்
    மறைபொருளாய் நீயும்!
    அறியாதோர் செய்யும்பிழை
    பொறுத்தருள்வாய் நாளும்!//

    படத்திற்கு ஏற்ற அழகான வரிகள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. தங்களின் வருகையும் பாராட்டும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. படமும் அழகு. படத்திற்கேற்ற வரிகளும் அழகு. பகிர்வுக்கு நன்றிகள் சகோதரரே.

    பதிலளிநீக்கு
  7. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  8. 1954இல் நீங்கள் பிறக்கவில்லை, ஆனால் நான் பிறந்துவிட்டேன்.அப்போது வயது வெறும் நான்குதான்! எனவே விகடன் தீபாவளி மலரை அப்போது நான் படிக்க முடியவில்லை. அந்த பாக்கியம் இன்று உங்களால் கிடைத்தது. மிக்க நன்றி நண்பரே! (2) காலத்தால் அழியாத 'சித்ரலேகா'வின் ஓவியம் கண்ணுக்கு விருந்தாகிறது. அந்தக் கண்ணன் பொம்மைக்கு அழகான கவிவடிவம் தந்தீர்கள். சந்தம் சிந்தும் சுந்தரக் கவிதை ! நிறைய எழுத வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  10. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  11. மனம் கவர்ந்த கவிதை! பகிர்விற்கு நன்றி! ஓவியம் அருமை!-தக்‌ஷி

    பதிலளிநீக்கு
  12. அந்தக்கால ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வந்துள்ள சிறப்பான ஓவியத்துக்கு ஏற்ற கவிதை அழகு. பாராட்டுக்கள்.

    60 வருடங்களுக்கு முன்பு வெளிவந்துள்ள அந்தப்படம் இன்றும் பார்க்க அழகாக உள்ளது, பாருங்கோ. பகிர்வுக்கு மகிழ்ச்சி. ;)

    பதிலளிநீக்கு
  13. தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன் ஐயா! நீங்கள் கூறியதுபோல் படம் மிகவும் அருமையாக இருந்தது. கண்டதும் வியந்தேன். தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  14. அற்புதமான சொல்வண்ணம்
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  15. அழகு கொஞ்சும் படத்திற்கு அழகான பாடல் வரிகள்.ஆக்கியோரான தங்களுக்கு என் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் பாராட்டும் மிக மகிழ்வளித்தது! நன்றி!

      நீக்கு
  16. அழகான ஓவியம்; அருமையான பாடல்.

    இரண்டையும் ரசித்தேன்.... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  18. படம் மிக அழகு.
    அதற்கு உங்களின் கவிதை அற்புதம்.

    வாழ்த்துக்கள்.

    மயக்கம் தெளிவிக்கும்
    மறைபொருளாய் நீயும்!
    அறியாதோர் செய்யும்பிழை
    பொறுத்தருள்வாய் நாளும்!//
    இறைவன் தான் பொறுத்தருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  19. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  20. மயக்கம் தெளிவிக்கும்
    மறைபொருளாய் நீயும்!
    அறியாதோர் செய்யும்பிழை
    பொறுத்தருள்வாய் நாளும்! அழகான கண்ணனும் அருமையான வரிகளளும் வாழ்த்துக்கள் சகோதரா.....!

    பதிலளிநீக்கு
  21. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  22. அன்று கண்ணனைஅலங்கரித்த
    யசோதையை கண்முன்னே கொண்டு நிறுத்திய
    ஓவியர் சித்ரலேகாவிற்கு பாராட்டுக்கள்.
    அந்த காட்சியை எங்கள் கண்முன் கொண்டு வந்த உங்களுக்கும்தான்.

    பதிலளிநீக்கு
  23. தங்களின் வருகை மகிழ்வளித்தது! அழகாக வரையும் நீங்கள் நிச்சயம் இரசிப்பீர்கள் என நினைத்தேன்! வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  24. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு