செவ்வாய், 18 மார்ச், 2014

ஒற்றைப் பறவை! - காரஞ்சன் (சேஷ்)

 
ஒற்றைப் பறவை!

தனிமைநாடும் வேளைகளில்

சுற்றித் திரியும்

ஒற்றைப் பறவையிடம்

ஒட்டிக் கொள்கிறது மனம்!

 


வெளிச்சம் பரவிய விரிந்த வானில்

விருப்பம்போல் வட்டமிடும்

ஒற்றைப் பறவை!

வழி மாறியதோ?

 
 

மோனநிலையில்

முள்மரத்தின் மீது ஒரு பறவை!

வலி மிகுந்ததோ?

 


பட்டமரக் கொம்பில்

பரிவுடன் ஒரு பறவை!

வாழ்ந்த இடம்தேடி

வந்தமர்ந்ததோ?

 


கிளை மீதமர்ந்து -சோக

கீதம் பாடும் ஒரு பறவை!

துணை ஒன்றைத்தேடி

துயரம் கொண்டதோ?

 


இவற்றை மறந்து

பறக்கத் துணிந்தால்..

எந்தப் பறவைக்கும்

இரையுண்டு உலகினிலே!

 


பாடம் தந்திடும்

பறவைப் பார்வை!

                                                       -காரஞ்சன்(சேஷ்)


படங்கள்: கூகிளுக்கு நன்றி!

39 கருத்துகள்:

  1. அன்பின் காரஞ்சன் ( சேஷ் ) - அருமையான குறுங்கவிதைகள் - தேர்ந்தெடுக்கப் பட்ட படங்கள் - அவற்றிற்கான கவிதைகள் - பொருத்தம் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா.

    கவிதையின் வரிகளை ரசித்தேன்..
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்....ஐயா.

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  3. அருமையான படங்கள். படங்களுக்கேற்ற கவிதைகள்....

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. இனிது இனிது
    ஏகாந்தம் இனிது
    என்ற பாடத்தை இந்த பறவைகள்
    நமக்கு புகட்டுகின்றன. போலும்!

    படங்களும் கவிதை வரிகளும் அருமை, இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

      நீக்கு
  5. அழகு பறவைகளின் வெளியும் கவிதையும்

    பதிலளிநீக்கு
  6. படமும் தலைப்பும்
    கவிதையும் மிக மிக அருமை
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் பாராட்டும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

      நீக்கு
  7. அருமையான படங்கள்...படத்திற்கேற்ற வரிகள்....அனைத்தும் அருமை சகோதரரே ! பகிர்வுக்கு நன்றிகள் !!

    பதிலளிநீக்கு
  8. ஒற்றைப் பறவையானாலும்
    பறக்கத்துணியவேண்டும் என
    இற்றைப்படுத்திய பகிர்வுகள் அருமை.. பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  9. படங்களுக்கேற்ற கவிதையா...?
    கவிதைக்கேற்ற படங்களா...?

    இனிமையான ரசனை... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  10. படமும் கவிதை வரிகளும் சிறப்புங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி!

      நீக்கு
  11. ஒற்றைப்பறவையின் சோகம் ஓராயிரம் கதைகளைச் சொல்கிறது.
    துணையைத் தேடித் துயரம் கொண்ட பறவையின் சோகம் மறக்க முடியாதது. மனதில் நிற்கும் சிறந்த குறுங்கவிதை.பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. நன்றாக எழுதியுள்ளீர்கள் நண்பரே. பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  13. தங்களின் வருகை மகிழ்வளித்தது! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  14. பறவைகள் அழகு. அது சொல்லும் பாடமும் அருமை.

    பதிலளிநீக்கு
  15. தங்களின் வருகை மகிழ்வளித்தது! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  16. பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்! கவிதைகள் பலவிதம்! ஆனால் எல்லாமே அழகியல் மிகுந்தவை!

    பதிலளிநீக்கு
  17. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  18. அருமையான வரிகளுடன் அற்புதமான கற்பனையுடன் செதுக்கிய கவிதை என்னும் சிறப்பான சிற்பம். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  19. கவிதையும் அழகு, படங்கள் அழகோ அழகு! கூகுளுக்கு நன்றி சொன்னீங்க பாருங்க... என் தலையில் ணங் னு ஒரு சத்தம் ! உண்மைதான்! நன்றி.

    பதிலளிநீக்கு
  20. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  21. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  22. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  23. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு