திங்கள், 12 டிசம்பர், 2011

சொல் - கவிதை ஆக்கம் காரஞ்சன் (சேஷ்)

சொல்

(சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை!)

வாக்கிய மாலைக்கு
வார்த்தை மலராகும்!

உதிர்க்கும் வார்த்தைகளே
ஒருவரின் குணமுணர்த்தும்!

சொல்வன்மை தன்னுடனே
சோர்வின்மை சேர்ந்திருந்தால்
விலகாமல் நம்முடனே
வெற்றி நிலைத்திருக்கும்!

எய்த அம்பும்
இயம்பிய வார்த்தையும்
என்றும் திரும்பாது!

கல்லடி பட்டாலும்
காயம் ஆறிவிடும்!
சொல்லடி பட்டாலோ
சுட்டவடு நிலைத்திருக்கும்!

மனித குலத்திற்கு
மருந்தாகும் நல்வார்த்தை!

பழுதற்ற விதையாகும்
பயனுள்ள நற்சொல்லும்!

இனிய சொற்களையே
என்றும் விதைத்திடுவோம்!

வளர்ந்து பயிராகி
வாழ்வில் வளம்தரவே!

                                       -காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

2 கருத்துகள்:

  1. அன்பின் காரஞ்சன் - இனிய சொற்களின் குணத்தினை அழகாகச் சொல்லிய விதம் நன்று. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு