சனி, 24 டிசம்பர், 2011

ஆழிப்பேரலையா? அழிவுப்பேரலையா? - காரஞ்சன்(சேஷ்)

ஆழிப்பேரலையா? அழிவுப்பேரலையா?
            
                                    டிசம்பர் 26- 2004
          கடல்சூழ்  நம்நாடு -துயரக்
          கடலில் ஆழ்ந்த தினம்!
                 
          உலகமெலாம் கண்ணீரோடு
          ஒலித்த வார்த்தை- சுனாமி!

          அகழ்வாரைத் தாங்கும் நிலமும்
          எங்கோ ஓரிடத்தில்
          எரிமலையாய் வெடிக்கிறதே!
          நடுங்கிப் பிளந்து
          நாட்டையும் அழிக்கிறதே!

         அன்றோ.....
         சுமத்ராவின் கடலடியில்
         சூல்கொண்ட நிலநடுக்கம்
         அதிரப் பெயர்த்த ஆழிநீரோ
         ஆற்றல் அழியா
         அலைத்தொடர் ஆனதே!

         பாயப் பதுங்கிய புலியாய்
         ஓரிரு மணித்துளிகள்
         உள்வாங்கிய கடல்!

         நூறடிச் சுவர்போல்
        ஆயிரம் கைகொண்டு
         தீராப் பசியுடன்
         எட்டிய மட்டில்
         ஊரினுட் புகுந்து
         உட்கொண்டது அனைத்தையும்!

        ஓட வழியுமில்லை!
        ஒளிய இடமுமில்லை!

        வறியோர் முதியோர்
        சிறியோர், சீமான்
        பிணியில் வாடினோர்
        பணிமேற் சென்றோர்,-உடற்
        பயிற்சி  மேற்கொண்டொர்
        அனைவரும் மாண்டனர்!

        உலக வரைபடம் சில
        ஊர்களை இழந்தது!

        என்ன நடந்தது?
        என்றறி யுமுன்னே
        எல்லாம் முடிந்தது!

        பெற்றோர் இருந்தனர்
        பிள்ளைகள் இல்லை!
        பிள்ளைகள் இருந்தனர்
        பெற்றோர் இல்லை!

         துயரே உருவாய்
         உறவைத் தேடிய
         உறவுகள் அனைத்தும்
         ஓர் உறவாயின!

         நொடியில் மடிந்து
         ஒதுங்கிய கூடுகள்
         எத்தனை கோடி!
     
         இந்த நூற்றாண்டில்
         இது பேரழிவு!

         உறவை இழந்தோர்க்கு
         உறவெனப் பலபேர்
         உதவிட விரைந்தனர்!

         மானிடர் அழிந்தும்
         மானுடம் வாழ்ந்தது!

         எத்தனை பேரிடர்
         எதிர் வந்தாலும்
         உற்ற துணையாய்
         உதவிடப் பலரை
         பெற்றுளதை எண்ணி
         பெருமிதம் கொண்டு
         மீண்டெழுந்து மிளிர்கிறாள்
         எங்கள் பாரதத்தாய்!

                                                   -காரஞ்சன் (சேஷ்)
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

26 கருத்துகள்:

 1. yen kannai kadalukkul ezhutthuchendra kavidai.kadal neerukku uppu podhavillaipolum

  adhan kannerai thedi kadaloorukkum vandhadho?

  பதிலளிநீக்கு
 2. நல்ல கவிதை நண்பரே. 'சுனாமி தினத்தை' நினைவுபடுத்தியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அன்பின் காரஞ்சன் - அருமையான நினைவுக் கவிதை - மானிடர் அழிந்தும் மானுடம் வாழ்கிறது. உறவைத் தேடிய உறவுகள் அனைத்தும் ஓருறவாயின. வரிகள் அத்தனையும் அழுத்தம் திருத்தம். நல்வாழ்த்துகள் காரஞ்சன் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 4. அருமையாக எழுதியுள்ளீர்கள்; அந்த சோகத்தை யாரால் மறக்க முடியும்?

  // பெற்றோர் இருந்தனர்
  பிள்ளைகள் இல்லை!
  பிள்ளைகள் இருந்தனர்
  பெற்றோர் இல்லை!//

  // உறவை இழந்தோர்க்கு
  உறவெனப் பலபேர்
  உதவிட விரைந்தனர்!

  மானிடர் அழிந்தும்
  மானுடம் வாழ்ந்தது!//

  //எத்தனை பேரிடர்
  எதிர் வந்தாலும்
  உற்ற துணையாய்
  உதவிடப் பலரை
  பெற்றுளதை எண்ணி
  பெருமிதம் கொண்டு
  மீண்டெழுந்து மிளிர்கிறாள்
  எங்கள் பாரதத்தாய்!//

  இதே கருத்துக்களை என் சமீபத்திய“தாயுமானவள்” சிறுகதையில் கொண்டு வந்துள்ளேன், ஐயா.

  ஏராளமானவர்கள் பாராட்டியுள்ளனர்.

  நேர அவகாசம் இருந்தால் படித்துவிட்டுக் கருத்துக் கூறுங்கள். அதற்கான இணைப்பு

  http://gopu1949.blogspot.com/2011/12/1-of-3.html

  http://gopu1949.blogspot.com/2011/12/2-of-3.html

  http://gopu1949.blogspot.com/2011/12/3-of-3.html

  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.
  அன்புடன்
  vgk

  பதிலளிநீக்கு
 5. நல்ல கவிதை நண்பரே.....,

  வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
 6. அருமையான கவிதை.
  வாழ்வெல்லாம் நினைவிருக்கும் துயர நிகழ்வு.

  பதிலளிநீக்கு
 7. இந்த நூற்றாண்டின் நினைவு வடு ..இந்த சுனாமி ஆழிப்பேரலை ...
  அதை நினைவுபடுத்தும் என்றும் உங்கள் கவிதை ..
  நல்ல சொற்களில் நளினமாய் வார்த்தைகளை புகுத்தி
  அழகிய படைப்பு....

  அந்த நாளை எண்ணினால் எத்தனை கண்களில் கண்ணீர் கசிகின்றது ...
  அந்த கோர சம்பவம் மீண்டும் வராமலிருக்க இறைவனை வேண்டிக்கொள்வோம்..
  மடிந்த உறவுகளுக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் ...

  பதிலளிநீக்கு
 8. அருமையான பதிவு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 9. அன்பின் காரஞ்சன் - வலைச்சரம் மூலமாக வந்தேன் - என் மறுமொழி ஏற்கனவே இங்குள்ளது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 10. உலக வரைபடம் சில
  ஊர்களை இழந்தது!//

  இருந்தாலும்

  // எத்தனை பேரிடர்
  எதிர் வந்தாலும்
  உற்ற துணையாய்
  உதவிடப் பலரை
  பெற்றுளதை எண்ணி
  பெருமிதம் கொண்டு
  மீண்டெழுந்து மிளிர்கிறாள்
  எங்கள் பாரதத்தாய்!//

  மிளிரும் அருமையான கவிதை !

  பதிலளிநீக்கு